இந்தக் கேள்விக்கு சரியான பதில் இல்லை எனில், பி.எஃப் பணத்தை எடுக்கவே எடுக்காதீர்கள்!| pf money, investment, saving and guidance for money management

Spread the love

5. இளமையில் சேமிப்பு, முதுமையில் மரியாதை!

குமரேசனின் வாழ்க்கையில் இன்று ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு முழுக் காரணம் அவருடைய பணப் பழக்கமே. சேமிப்புப் பழக்கம் இல்லாதது, பி.எஃப் பணத்தைப் பயன்படுத்திய விதம், ஓய்வுக்காலத்துக்கான திட்டம் இல்லாதது போன்ற காரணங்களே அவரின் நிலைக்குக் காரணம். இளமையில் உழைக்க உடல் ஒத்துழைக்கும். பணத்தைச் சம்பாதிக்க முடியும். ஆனால், வயது அதிகரிக்கும்போது உடல்நலப் பிரச்னைகள் அதிகரிக்கலாம். வேலை செய்யும் திறன் குறையலாம். வருமானம் நின்றுவிடலாம். அப்போது முன்கூட்டியே உருவாக்கிய சேமிப்புதான் கைகொடுக்கும். எனவே, ஓய்வுக்காலத்துக்கான திட்டமிடலை குமரேசனைப் போல சுத்தமாக செய்யாமலேயே இருக்கக்கூடாது; இன்னும் பலரைப் போல 50 அல்லது 55 வயதில் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடவும் கூடாது. வேலைக்குச் சேர்ந்த காலத்திலிருந்தே அதற்கான திட்டத்தைத் தொடங்க வேண்டும்.

குமரேசனின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம் இதுதான்… பணத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது சம்பாதித்த பணத்தைச் சரியாக நிர்வகிப்பதும் எதிர்காலத்துக்காகச் சேமிப்பதும்.

பிக்னிக் செல்வதில் தவறில்லை. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதிலும் தவறில்லை. நமக்குப் பிடித்த பொருள்களை வாங்குவதும் தவறில்லை. ஆனால், நிகழ்கால மகிழ்ச்சிக்காக நம்முடைய நாளைய பாதுகாப்பை இழந்துவிடக் கூடாது. குமரேசனைப் போன்றவர்கள் ஓய்வுக்காலத்தில் பணமில்லாமல் தவிக்கும் நிலையைப் பார்த்து, வருத்தப்படுவது மட்டும் போதாது. அவர்களுடைய அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இன்று பி.எஃப் பணத்தை எடுப்பதற்கு முன் ஒரு நிமிடம் யோசியுங்கள். ‘இந்தப் பணம் எனக்கு இப்போது உண்மையிலேயே தேவையா, ஓய்வுக்காலத்தில் உழைக்க முடியாத சூழலில் உதவும் பணத்தை எடுத்துச் செலவு செய்ய வேண்டிய சரியான காரணம் என்ன?’ – இந்தக் கேள்விக்கு உங்களிடம் சரியான பதில் இல்லை என்றால் பி.எஃப் பணத்தை எடுக்கவே எடுக்காதீர்கள்!

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *