நீதிபதி குடும்பம் என்பதால் பாரபட்சமா? – வழக்கை கையில் எடுத்தது உச்ச நீதிமன்றம்! |Twisha-sharma-death-case-supreme-court-takes-suo-motu-action

Spread the love

ஆனால், தனது மகளை வரதட்சணை கேட்டு கணவர் சமர்த்தும், மாமியார் கிரிபாலா சிங்கும் கொடுமைப்படுத்தியதாகவும், தற்கொலைக்குத் தூண்டியதாகவும் த்விஷாவின் பெற்றோர் குற்றம்சாட்டினர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சிங் குடும்பத்தினர் அடியோடு மறுத்துள்ளனர். த்விஷா மன அழுத்தத்தில் இருந்ததாகவும், போதைப்பொருளுக்கு அடிமையாகி இருந்ததாகவும் அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

வழக்கின் பின்னணி என்ன?

த்விஷாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது கணவர் சமர்த் சிங் தலைமறைவானார். பின்னர், ஜபல்பூர் நீதிமன்றத்தில் சரணடைய வந்தபோது கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். முன்னதாக, த்விஷாவின் உடல் போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தபோது, பிரேதப் பரிசோதனையில் தங்களுக்கு திருப்தியில்லை என்று கூறி, உடலை வாங்க அவரது பெற்றோர் மறுத்தனர். இரண்டாவது முறையாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு போபாலில் பிரேதப் பரிசோதனை செய்த பிறகே உடலைப் பெற்றுக்கொண்டனர். இந்தச் சூழலில்தான், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *