இந்தியாவை பந்தாடிய இங்கிலாந்து.. 4-வது டி20-யிலும் படு தோல்வி! என்னதான் ஆச்சு.. புலம்பும் ரசிகர்கள் | India Lose 4th T20I – What’s the Reason? Netizens Left Wondering

Spread the love

Cricket

oi-Mani Singh S

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த இந்திய அணி இன்றைய போட்டியிலாவது வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்றும் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்துள்ளது. 4 போட்டியில் 3-ல் தோல்வியை தழுவிய இந்திய அணி தொடரை பறிகொடுத்துள்ளது. இந்திய அணிக்கு என்ன தான் ஆச்சு என ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயன 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டாலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய நேரப்படி நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டம் இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக இருந்தது. ஏனெனில் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அனி இந்திய அணியை ஊதித்தள்ளியது.

India Suffer Fourth Straight Defeat - What s the Reason Netizens Left Wondering

பேட்டிங்கில் தடுமாறிய இந்திய அணி

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலன இளம் பட்டாளம் இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இதனால் இன்றைய போட்டியில் கம்பேக் கொடுப்பதோடு தொடரை இந்தியா தக்க வைக்கும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இளம்புயல் சூர்யவன்ஷி 15 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

அபிஷேக் சர்மா (16 ரன்கள்), இஷான் கிஷான் (4 ரன்கள்) என சொதப்பினாலும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனி ஒருவராக அதிரடி காட்டி இந்திய அணியின் மானத்தை காப்பாற்றினார். ஓரளவு கவுரமான ஸ்கோரை இந்தியா எட்ட இவரது அதிரடியே காரணமாக இருந்தது. இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் 8 ரன்களில் அர்தீப் சிங் பந்தில் கீப்பர் கேட்ச் ஆனார்.

13.5 ஓவர்களிலேயே வெற்றி

இதனால் இந்திய அணிக்கு உற்சாகம் கிடைத்தது. ஆனால், பிலிப் சால்ட்டும், ஹாரி புரூக்கும் இந்திய அணியின் பந்து வீச்சை நொறுக்கின. ஹாரி புரூக் பேட்டில் பட்ட பந்துகள் சிக்சரும் பவுண்டரிகளுமான பறந்தன. இந்த ஜோடியை பிரிக்க ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்த எந்த முயற்சியும் பலனிக்கவில்லை. 6 பந்து வீச்சாளர்களை ஸ்ரேயாஸ் ஐயர் முயற்சித்து பார்த்தார். ஆனால், யார் வந்து போட்டால் என்ன.. பின்னி பெடலடுத்து விடுவோம் என்று சொல்வது போல அடித்து துவம்சம் செய்தனர்.

1 விக்கெட் மட்டுமே இழந்து 159 ரன்களை 13.5 ஓவர்களிலேயே இலக்கை பிடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் இங்கிலாந்து வென்றுள்ளது. 3-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

தோல்விக்கு காரணம் என்ன?

இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த சஞ்சு சாம்சனை களமிறக்காதது பெரிய மைனஸ் ஆக அமைந்தது.. குறிப்பாக பேட்டிங்கில் எந்த வீரரும் நிலைத்து நின்று ஆட முனையவில்லை. பேட்டிங் வரிசையிலும் இந்தியா சொதப்பியது. 20 ஓவர் போட்டிகளில் 3-வது இடத்தில் களமிறங்கி இரண்டு சதங்கள் விளாசிய திலக் வர்மாவை, இந்தப் போட்டியில் சிவம் துபேவுக்கு பிறகு 6-வது இடத்தில் களமிறக்கினர்.

இந்த மாற்றத்திற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. மாறாக 8 பந்துகளை மட்டுமே பிடித்த துபே 11 ரன்களில் நடையை கட்டினார். இந்திய பேட்ஸ்மேன்கள் ஷாட் பால்களை எதிர்கொள்ள சிரமப்பட்டனர். ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் டோங்வே ஷார்ட் பால்களாக வீசி இந்திய பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினர். வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷான் ஆகியோர் அடுத்தடுத்து காலியாகினர். பேட்டிங்கில்தான் இப்படி என்றால் பந்து வீச்சும் மோசமாக இருந்தது.

4 போட்டியில் 3-ல் தோல்வியை தழுவி இந்திய அணி தொடரை பறிகொடுத்துள்ளது. இந்திய அணிக்கு என்ன தான் ஆச்சு என ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *