இந்தியா கூட்டணி: “இந்தக் கூட்டணியின் பலம்…” – மல்லிகார்ஜுன கார்கே | “The strength of this alliance…” – Mallikarjun Kharge

Spread the love

டெல்லியில் திங்கட்கிழமை (இன்று) எதிர்க்கட்சிகளின் “இந்தியா கூட்டணி’யின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க மற்றும் ஆம் ஆத்மி ஆகிய முக்கிய கூட்டணிக் கட்சிகள் இக்கூட்டத்தைப் புறக்கணித்துள்ளதாலும், கூட்டணியில் காங்கிரஸின் செயல்பாடு குறித்து சில கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 23 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தியா கூட்டணிக்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் - டெல்லி

இந்தியா கூட்டணிக்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் – டெல்லி

குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, விசிக தலைவர் தொல். திருமாவளவன், என்சிபி எம்பி சுப்ரியா சுலே உள்ளிட்டப் பலர் பங்கேற்றனர். அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக கட்சிக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை.

இந்தக் கூட்டத்தில் தலைவர்களை வரவேற்றுப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் கூட்டணியின் பலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *