இந்தியா கூட்டணி: பழைய கம்பீரம்; மாறாத பாணி- மாதிரி நடாளுமன்றத்தில் மீண்டும் ஒலித்த மீரா குமார் குரல் |Mock Parliament: Meira Kumar Returns To Chair

Spread the love

மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தில், மீரா குமார் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து கூட்டத்தை வழிநடத்தியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

81 வயதான மீரா குமார், கடந்த 2009 முதல் 2014 வரை மக்களவை சபாநாயகராகப் பொறுப்பு வகித்தவர். இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபாநாயகர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. அவையில் உறுப்பினர்கள் பேசும்போது நேரத்தைப் பின்பற்றச் செய்வது, விதிமுறைகளை மதிக்க வைப்பது, அதே நேரத்தில் கண்ணியத்தைக் காப்பது ஆகியவற்றில் தனக்கென ஒரு பாணியை அவர் உருவாக்கியிருந்தார்.

மீரா குமார்

மீரா குமார்

அந்தப் பழைய பாணியையே டெல்லியில் நடைபெற்ற மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்திலும் மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா குமார் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து, தனது பழைய கம்பீரமான குரலில் உறுப்பினர்களை வழிநடத்தியக் காட்சி இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *