ஈரான் போர் பாகிஸ்தான் பொருளாதாரத்தை பாதிக்கிறது: ஷெபாஸ் ஷெரீப்|Iran War Pushes Pakistan Into Economic Pressure

Spread the love

ஈரான் போரில் அமெரிக்கா, ஈரானுக்கு இடையே பாகிஸ்தான் தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது.

ஈரான் போர் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியிருக்கிறார்.

“ஈரான் போர் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, பாகிஸ்தான் அடைந்த பொருளாதார வளர்ச்சியிலும் இந்தப் போர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.டி.வான்ஸ் - ஷெபாஸ் ஷெரீப்

ஜே.டி.வான்ஸ் – ஷெபாஸ் ஷெரீப்
Prime Minister Office of Pakistan | X

ஈரான் போருக்கு முன்பு, பாகிஸ்தான் 300 மில்லியன் டாலர்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. இந்தப் போரினால் எண்ணெய் இறக்குமதியின் விலை இப்போது 800 மில்லியன் டாலராக மாறிவிட்டது.

இது பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு கூடுதல் அழுத்தத்தைத் தருகிறது.

இந்த விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் பெட்ரோல் நுகர்வைக் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் குறைத்துவிட்டது.

இதனால், இந்தப் போரை முடிப்பதற்கான செயல்களிலும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் பாகிஸ்தான் தொடர்ந்து செயல்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *