இந்திய கப்பற்படையில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மூன்று கப்பல்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்கள் தற்போது சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, “இன்று, ‘சுயசார்பு இந்தியா, பாதுகாப்பான இந்தியா, மற்றும் வளர்ந்த இந்தியா’ என்ற இலக்குகளை நோக்கிய ஒரு முக்கியத் திட்டம் இந்த மண்ணில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
சற்று நேரத்திற்கு முன்புதான், “ஐ.என்.எஸ் அக்ரே (INS Agray)’, ‘ஐ.என்.எஸ் துணாகிரி (INS Dunagiri)’ மற்றும் ‘ஐ.என்.எஸ் சன்சோதக்’ ஆகிய மூன்று கப்பல்களும் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன.

தற்செயலாக, இன்று ஜூன் 21-ம் தேதி உலக ஹைட்ரோகிராபி (நீர்வரைவியல்) தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில், இந்தியாவின் அதிநவீன ஹைட்ரோகிராபி கப்பலான ஐஎன்எஸ் சன்சோதக்-ஐ நாம் கடற்படையில் இணைத்திருப்பது ஒரு அற்புதமான தற்செயல் நிகழ்வு.
இன்று பாதுகாப்புத் துறையில் இந்தியா வெறும் வாங்குபவராக (Buyer) மட்டுமே இருக்க விரும்பவில்லை. நமது ராணுவ பலம் உலக நாடுகளுக்கான ஒரு சந்தையாக மட்டும் இருக்க முடியாது.