யஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் “டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அப்போது மத்திய கிழக்கில் கடுமையான போர் நிலவியதால், படத்தின் ஓவர்சீஸ் பிசினஸ் பாதிக்கப்படும் எனப் படத்தின் ரிலீஸ் தேதியை ஜூன் 4-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

ஆனால், அந்தத் தேதியிலிருந்தும் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாகப் படக்குழுவினர் மீண்டும் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது இத்திரைப்படம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியாவதாக அறிவித்திருக்கிறார்கள்.