திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்கும் சிறப்பு பேரவை நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்…
“நவம்பர் மாதம் 1ஆம் தேதி தான் தமிழ்நாடு என்று பெயர் அறிவிக்கப்பட்ட நாள். ஜூலை 18ஆம் தேதி “தமிழ்நாடு என்று அறிவிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றிய நாளை தமிழ்நாடு நாள் என கொண்டாட வேண்டும் என திமுகவினர் வற்புறுத்தி வருகிறார்கள். அதிகாரபூர்வமாக அரசு அறிவித்த நாளை எடுத்துக் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும்.
கன்னியாகுமரி லாக்கப் டெத் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை… குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள், அரசின் சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது.
முதல்வர் தரப்பில் ஏன் இந்த விவகாரம் பற்றி பேசவில்லை என நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். சமீபத்தில் முதல்வரை சந்திக்கும் போதுகூட, தமிழ்நாட்டில் இது போன்ற லாக்கப் டெத் நடைபெறக் கூடாது என்று கோரிக்கை வைத்தேன்.
எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி என்ற முறையில் தவெக செயல்பாடு குறித்து பேசி வருகிறார். இன்று மட்டுமல்ல, தவெக ஆளக்கூடிய 5 ஆண்டுகளும் அப்படித்தான் சொல்வார்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சி சரியான திசையில் செல்கிறது, ஆடு மாடு பலியிடுவது, திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்ட மதச்சார்பற்ற கொள்கையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது போன்றவை பாராட்டுக்குரியவை.

தூய்மை பணியாளர் பணியை தனியாரிடம் ஒப்படைப்பது போன்ற சில விஷயங்களில் எங்களுக்கு விருப்பமில்லை. அதனால் எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தோம், அவர்கள் அதை திரும்ப பெறுகிறார்கள்.
அமைச்சர்கள் அனைவரும் அரசின் சார்பில், மக்கள் பிரச்னைகளுக்கு பதில் சொல்கிறார்கள். முதல்வர் விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன் என நீங்கள் முதல்வர் விஜய் அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.