
திமுகவினரிடமும் பொது மக்களிடமும் என் பெயரை மேலும் கெடுக்கும் நோக்கிலேயே இப்படிச் செய்து கொண்டு வருகின்றனர் இவர்கள்.
ஆனால் இத்தகைய தாக்குதல்களை தாங்கி அனுபவப்பட்டு விட்டேன்,
என் வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறுகள் இரண்டு. ஒன்று 2006ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. அன்றைய மதிமுக தலைமை நிர்வாகிகள் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அந்தக் கூட்டணியை அமைக்க வைத்தார்கள். .
இரண்டாவது தவறு 2017 ல் பாஜகவை எதிர்ப்பதற்காக திமுகவுடன் கூட்டு சேர்ந்தது. இந்த இரு தவறுகளையும் நான் செய்திருக்கக் கூடாது. ஆனால் எல்லாம் கடந்த காலமாகி விட்டது. இனி நமக்கு யாரும் எந்தக் கேடும் செய்ய முடியாது. இனி நமக்கு வெற்றிதான்” எனக் குறிப்பிட்டிருக்கிறார் வைகோ.