“இந்த லிங்கம் கதாபாத்திரத்திற்கு எனது முதல் சாய்ஸ் கதிர்தான்!” – லக்ஷ்மி சரவணக்குமார் “Kathir was my first choice for the character of Lingam!” – Lakshmi Saravanakumar

Spread the love

ஆனால், அது சரியாக வரவில்லை. அதன்பின், ‘தகப்பன் கொடி’ என்ற கதையைத் தயார் செய்து இயக்குநர் சங்கர் சாரிடம் சொன்னேன். அவருக்கு அந்தக் கதை பிடித்துப்போக ‘எஸ் பிக்சர்ஸ்’ மூலமாகவே இதனைச் செய்யலாம் என்றார்.

ஆனால், அந்தத் திட்டம் அப்போது தள்ளிப் போனது. அதே நேரத்தில், கிட்டத்தட்ட அதே பின்னணியைக் கொண்ட ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படமும் ரிலீஸானதால், அந்தப் பட முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.

Lakshmi Saravanakumar - Lingam

Lakshmi Saravanakumar – Lingam

பின்னர், கோவிட் பேரிடர் காலத்தில் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் கடுமையான குடும்ப மற்றும் பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதுதான் ‘இரண்டாம் ஆட்டம்’ தொடரை எழுதினேன். அந்த நெருக்கடிக்கு மத்தியில்தான் ஒரு மருத்துவமனையில் வைத்து அக்கதையின் முதல் இரண்டு எபிசோடுகளை எழுதினேன்.

என்னிடம் பலரும் “உங்களுடைய நாவல்களை ஏன் நீங்களே படமாக்கக் கூடாது?” எனக் கேட்பதுண்டு. எனது ‘உப்புநாய்கள்’ நாவல் வந்தபோது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா அதைப் படமாக்கக் கேட்டார். ‘கானகன்’ நாவலையும், ‘கொமோரா’ நாவலையும் பல இயக்குநர்கள் கேட்டார்கள்.

‘இரண்டாம் ஆட்டம்’ தொடர் வரும்போதே இயக்குநர் பாலா சார் உள்ளிட்ட பலரும் கேட்டனர். ஆனால், இப்போது அந்தக் கதையிலிருந்து சிலவற்றைக் காட்சிகளாகச் சில படங்களில் பயன்படுத்திவிட்டார்கள்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *