“இந்த வெற்றி மும்பை இந்தியன்ஸின் தலையெழுத்தையே மாற்றும்”- ஹர்திக் பாண்டியா | MI captain hardhik pandya post match speech

Spread the love

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்20)நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது மும்பை அணி.

இந்த வெற்றிக்கு பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ” அகமதாபாத் மைதானம் எப்போதும் மும்பை அணிக்குச் சவாலான ஒன்று.

ஆனால், இன்று ஒட்டுமொத்த அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்த வெற்றி அணிக்கு மிகவும் அவசியமானது, அதிலும் வெளியூரில் வைத்துப் வெற்றி பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சி.

14-வது ஓவர் டைம்-அவுட்டின் போது, திலக் வர்மாவிடம் “எதைப் பற்றியும் கவலைப்படாமல் பந்தைப் பார்த்து அடி’ என்று மட்டுமே கூறினேன்.

அவரிடம் இருக்கும் அசாத்திய பேட்டிங் திறமை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.

மைதானத்தில் நான் கொடுத்த எனர்ஜி எனக்கே தலைசுற்றலை ஏற்படுத்தியது, ஆனால் அந்த வேகம் அணிக்குத் தேவைப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *