தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, 10ம் தேதி டெல்லியில் கரப்பான்பூச்சி அமைப்பினர் போராட்டம் நடத்த முயன்றனர்.
ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் இருந்து டெல்லி வந்த கரப்பான் பூச்சி அமைப்பு நிறுவனர் அபிஜித் தீப்கேவை, விமானத்தில் வைத்தே டில்லி போலீசார் கைது செய்தனர்.
அவரின் செல்போனை பறிமுதல் செய்த பிறகு, தடுப்பு காவலில் வைத்திருந்தனர். பின்னர் அவர் நிபந்தனையில் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்த இளைஞர்கள் ஒன்று கூடும் நிலையில் பொதுவாக டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தரை மத்திய அரசு நீக்கியிருக்கிறது.
இந்நிலையில் கரப்பான் பூச்சி அமைப்பு நிறுவனர் அபிஜித் தீப்கே தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அதில், ” ஜந்தர் மந்தர் இனி போராடுவதற்கான இடம் இல்லை. கோழையான சர்வாதிகாரிகளால் அது போர்க்களமாக மாறிவிட்டது. இனி இந்த நாடே ஜந்தர் மந்தராக மாறிவிடும்.
டெல்லியில் போராட்டங்கள் நடத்தப்படும் இடங்களுக்கான பட்டியலில் இருந்து இன்று ஜந்தர் மந்தரை நீக்கிய மோடி நாளை ஜனநாயகத்தையே ரத்து செய்வார். ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக மக்கள் மீண்டும் டெல்லியில் திரண்டு நிற்கிறார்கள்.

ஜந்தர் மந்தரை அகற்றிவிட்டால் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று மோடி நினைத்தால், அது அவருடைய தவறான கணிப்பு.
ஜந்தர் மந்தர் என்பது வெறும் ஒரு இடம் மட்டுமல்ல; அது யாராலும் என்றுமே அழிக்க முடியாத எதிர்ப்பின் அடையாளம்” என்று பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb