“இனி Nvidia-வின் நிர்வாகக் குழுவிலும் இருக்கமாட்டார்” – ராஜினாமாவை அறிவித்த ஜென்சன் ஹுவாங் | “He will no longer be on Nvidia’s board of directors” – Jensen Huang announces his resignation

Spread the love

உலகப் புகழ்பெற்ற ‘என்விடியா’ (Nvidia) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கணினி சிப் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங். இவர் தனது மனைவி லோரி ஹுவாங்கை திருமணம் செய்து 41 ஆண்டுகள் ஆகின்றன.

இவர்களுக்கு மேடிசன் என்ற மகளும் உள்ளார். 2025 மே மாதம், தைவானில் உள்ள ஓர் உணவகத்தில் ஜென்சன் ஹுவாங், சிங்கப்பூரின் “மெகாஸ்பீட்’ (Megaspeed) நிறுவன முன்னாள் பெண் அதிகாரியான ஆலிஸ் ஹுவாங் என்பவருடன் உணவருந்த சென்றுள்ளார்.

அங்கு ஜென்சனின் மகள் மேடிசன் மற்றும் அவரது நிச்சயதார்த்த கணவரும் உடன் இருந்துள்ளனர். அந்த விருந்தின்போது ஜென்சன், ஆலிஸின் இடுப்பில் கைபோட்டு கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். இதை அவரது மகளே தனது கைபேசியில் புகைப்படமும் எடுத்துள்ளார்.

ஜென்சன் ஹுவாங்

ஜென்சன் ஹுவாங்

ஆலிஸ் ஹுவாங், சீனாவின் அரசு உளவு அமைப்பிற்கு (MSS) நெருக்கமானவர் என்று அமெரிக்க உளவுத்துறை சந்தேகித்தது. என்விடியா நிறுவனத்தின் அதிநவீன AI சிப்களை சீனாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு தடை விதித்திருந்த நிலையில், ஆலிஸ் மூலமாக சுமார் 4.8 பில்லியன் டாலர் மதிப்பிலான கணினி வளங்கள் மற்றும் சிப்கள் சீன மின்-வணிக நிறுவனமான ‘அலிபாபா’விற்குச் சட்டவிரோதமாகக் கைமாறியிருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *