கந்த சஷ்டி விரதம் : கவசம் பாடினால் கவலையில்லை… ‘திருச்செந்தூரின் கடலோரத்தில் – 5’ | glory of kanda sasti kavasam

Spread the love

மந்திர ரகசியங்கள்

ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாகக் கவசங்களை இயற்றியிருந்தாலும், திருச்செந்தூரில் இயற்றப்பட்டது என்பதாலும், கந்த சஷ்டி காலத்தில் திருச்செந்தூர் கவசம் மிகவும் பிரபலமாக இருப்பதாலும், அதில் தனது பெயரைப் பதித்திருப்பதாலும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவசம் அதிகம் அறியப்படுகிறது. மற்ற ஐந்து படைவீடுகளுக்கும் கவசங்கள் உள்ளன.

கந்த சஷ்டி கவசத்தை வெறுமனே வாய்விட்டுப் பாடினால் மட்டும் போதாது. மனம் ஒருமுகப்பட்டு, சிந்தை கலங்காமல் தியானிக்க வேண்டும் என்பதையே கவச வரிகள் உணர்த்துகின்றன.

கந்த சஷ்டி கவசம் மந்திரக் கர்ப்பமாக அமைந்துள்ளது. மூல மந்திரங்களை குருவிடம் உபதேசம் பெற்று ஜெபிப்பது ஒரு முறை. ஆனால், குருமுகமாக மந்திர உபதேசம் அல்லது தீட்சை பெறாதவர்களுக்கும் அதன் பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மந்திரச் சொற்களை வெண்பாக்களுக்கு இடையே மறைத்து வைக்கும் வழக்கம் உள்ளது.

அதாவது, மந்திரச் சொற்கள் வெளிப்படையாகத் தெரியாமல் மறைந்திருந்தாலும் அவற்றின் வீரியம் அதிகமாக இருக்கும்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

கந்த சஷ்டி கவசத்தில், ‘ஐயும் கிளியும் அடவுடன் சவ்வும்’ போன்ற அட்சரங்கள் வருகின்றன. இவை பாலா திரியட்சரி என்று சொல்லப்படும் பாலா திரிபுரசுந்தரியின் மந்திரத்தைக் குறிக்கின்றன. அந்த மந்திரம் கவசத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ‘வசர வனப வருக வருக’ போன்ற சொற்களிலும் எழுத்துகள் மாறி மாறி வருவதைக் காணலாம். இது ஒரு பிரயோக விதி. உச்சாடனம், ஸ்தம்பனம், மாரணம், வித்வேஷணம் போன்ற பிரயோக விதிகளில் மந்திர அட்சரங்கள் மாறி வருவதற்கு ஏற்ப பலன்களும் மாறுபடும்.

அருணகிரிநாத சுவாமிகள் திருப்புகழில் பல சாஸ்திரக் கருத்துகளைப் பொதிந்து வைத்திருப்பதைப் போலவே, பாலதேவராய சுவாமிகளும் மந்திர சாஸ்திர நுட்பங்களை கந்த சஷ்டி கவசத்தின் பல இடங்களில் மறைத்து வைத்திருக்கிறார்.

கந்த சஷ்டி கவசத்தின் பின்னால் இவ்வளவு பெரிய வரலாறும், மந்திர சாஸ்திர நுட்பங்களும் உள்ளன.

கந்த சஷ்டி விரத காலத்தில் ஆறு நாள்களும் விரதம் இருப்பவர்கள், தினமும் இதைப் பாராயணம் செய்யலாம். ஆறு கவசங்களையும் தினமும் சொல்ல இயலாதவர்கள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படைவீட்டுக்குரிய கவசத்தைப் பாராயணம் செய்யலாம். அதுவும் சிறப்பான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும்.

திருச்செந்தூர் அற்புதங்களைத் தொடர்ந்து அறிவோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *