இன்னும் 30 நாட்களாகும்.. அடுத்து ரோகித் சர்மா – விராட் கோலி இணை களமிறங்கும்? முழு விவரம்! | Virat Kohli: When will Virat Kohli and Rohit Sharma will play their next match in the Indian ODI Team

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அடுத்ததாக எந்த ஒருநாள் தொடரில் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்ட சூழலில், அடுத்ததாக நியூசிலாந்து ஒருநாள் தொடரில் விளையாடுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இந்த ரசிகர்களுக்கு இந்த ஒருநாள் தொடர் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. ஏனென்றால் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிக்ஸ், பவுண்டரி என்று ரசிகர்களுக்கு அவர்களின் ஆட்டம் விருந்தாக அமைந்தது.

Virat Kohli

இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலி ஒரு சதமும், ரோகித் சர்மா ஒரு சதம் மற்றும் அரைசதமும் விளாசினர். அதேபோல் கேப்டன் சுப்மன் கில் 2 சதங்களை விளாசினார். இதன் காரணமாக தொடர் நாயகன் விருது சுப்மன் கில்லுக்கு சென்றது. சீனியர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆட்டம் 2027 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் அமைந்துள்ளது.

இருவருமே ஒவ்வொரு ஒருநாள் தொடரிலும் ஒரு சதத்தை விளாசி தங்களின் ஃபார்மை நிரூபித்து கொண்டே இருக்கின்றனர். ஃபிட்னஸ் அளவிலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட ஒருநாள் கிரிக்கெட்டுக்கான பிராண்ட் அம்பாஸடராக விராட் கோலியும், ரோகித் சர்மாவும் செயல்படுவதாக பார்க்கப்படுகிறது.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துவிட்ட சூழலில், அடுத்ததாக எந்த தொடரில் இருவரையும் ரசிகர்கள் பார்க்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி நம்பவர் 4ஆம் தேதி தொடங்க உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தான் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் ரசிகர்கள் பார்க்க முடியும்.

அந்த ஒருநாள் தொடரிலும் கூட சுப்மன் கில் 2 மற்றும் 3 ஆகிய போட்டிகளில் விளையாட மாட்டார் என்று சொல்லப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் தான் இந்திய அணி அந்த ஒருநாள் தொடரில் விளையாடும் என்று கூறப்படுகிறது. இதனால் 30 நாட்களுக்கு பின் ரோகித் சர்மா – விராட் கோலி இணை நியூசிலாந்து மண்ணில் சம்பவம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *