இன்ஸ்டா தோழியை பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்த நபர்; உணவு ஆர்டர் செய்யும்போது சிக்கினார் \ Instagram friend sexually assaulted, tied up naked, and tortured; woman rescued thanks to a food order

Spread the love

இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் ரஷ்மிதா கூறுகையில், “போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ​​ஜன்னல் வழியாக ஒரு மிருகத்தனமான மற்றும் கொடூரமான காட்சியை அவர்கள் கண்டனர். பாதிக்கப்பட்ட பெண் இரண்டு நாட்களாக பாலியல் மற்றும் உடல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு இருந்தார்.

அவரது கை துண்டிக்கப்பட்டு இருந்தது. சம்பவ இடத்தில் ஒரு கூர்மையான கத்தி கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் அவரைக் கொல்லத் தயாராகிக்கொண்டிருந்தார். சிறுமியின் ஆபாச புகைப்படங்களை எடுத்து வைரலாக்குவேன் என மிரட்டியது தெரியவந்தது. மேலும் அவர் அப்பெண்ணின் முழு குடும்பத்தையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்”‘ என்று தெரிவித்தார்.

இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர், காதல் விவகாரம் காரணமாக அவரும் சம்பந்தப்பட்ட பெண்ணும் ஒன்றாக இருந்ததாகவும், சிறுமி தனது கையைத் தானே வெட்டிக் கொண்டதாகவும் கூறினார்.

மேலும், சிறுமி தனது சொந்த விருப்பத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவருடன் மறைவிடத்திற்குச் சென்றதாகவும், கடத்தலில் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே போலீஸ் விசாரணைக்கு கைது செய்யப்பட்ட நபர் ஒத்துழைக்க மறுத்து வருகிறார். காலை உணவாக பிட்சா கேட்டு வருகிறார். நிர்பயிடம் போலீஸார் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி கொடுத்துள்ளது. விசாரணையில் அவரது மொபைல் போன் கடவுச்சொல் மற்றும் அப்பெண்ணின் மொபைல் ஃபோனைப் கொடுக்க மறுத்துவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் கேள்விகளைத் தவிர்ப்பதால் டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரிப்பதில் புலனாய்வாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கொலை

கொலை
சித்திரிப்புப் படம்

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர் மங்கலான சுவர்கள், துர்நாற்றம் வீசும் கழிப்பறை, கொசு கடித்தல் மற்றும் தூக்கமில்லாத இரவுகள் உள்ளிட்ட லாக்அப் நிலைமைகள் குறித்து புகார்களை எழுப்பி வருகிறார்.

அவர் காலை உணவிற்கு பீட்சா, இரவு உணவிற்கு பிரீமியம் உணவு, தடிமனான குஷன் அல்லது மென்மையான படுக்கை மற்றும் பூச்சி விரட்டிகளைக் கொடுக்கும்படி கேட்டு வருகிறார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாக மாறினர் என்று தெரிய வந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *