இன்றைய ஜோதிட பலன்கள்: எந்த ராசிக்கு வெற்றி காத்திருக்கிறது? – Kumudam

Spread the love

மேஷம் :

இன்று நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் நல்ல முடிவுகளைத் தரும் நாள். திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிக்க வாய்ப்பு உள்ளது. பணவரவு இருந்தாலும் தேவையற்ற செலவுகள் மனக்குழப்பத்தை ஏற்படுத்தலாம். குடும்ப விஷயங்களில் உறவினர்களின் தலையீட்டால் சிறிய சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாலை நேரத்தில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணியாளர்கள், கூட்டாளிகள் தொடர்பான பிரச்னைகளை பொறுமையுடன் கையாளவும்.

ரிஷபம் :

எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும் சாதகமான நாள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் முடியும். எதிர்பாராத செலவுகள் வரக்கூடும் என்பதால் நிதி விஷயங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மிதுனம் :

அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு அதிகம். தந்தை வழி உறவுகள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு உங்கள் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனை மற்றும் லாபம் திருப்திகரமாக இருக்கும்.

கடகம் :

தந்தை வழி உறவினர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்களுடன் சிறிய கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்களின் சந்திப்பு சாதகமான பலன்களை தரும். வியாபாரத்தில் லாபம் அதிகரித்து, பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சிம்மம் :

உற்சாகத்துடன் செயல்படும் நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிக்கும் சூழல் இருக்கும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் சுமாரான நிலை காணப்படும்.

கன்னி :

புதிய முயற்சிகளை தற்காலிகமாக தவிர்த்து வழக்கமான பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. மனதில் சோர்வு ஏற்படலாம் என்பதால் ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்ப பெரியவர்களிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

துலாம் :

மகிழ்ச்சியான சூழல் நிலவும் நாள். கணவன் – மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம். பிள்ளைகள் விஷயத்தில் பொறுமையாக அணுகுவது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம் :

மாலையில் நல்ல செய்தி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எதிரிகளின் தொல்லைகள் குறையும். சில காரியங்களில் சிறிய தாமதங்கள் இருந்தாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் மூலம் ஏற்பட்ட பிரச்னைகள் படிப்படியாக நீங்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு :

புதிய முயற்சிகளில் சற்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். சகோதரர்கள் தொடர்பான விஷயங்களில் தாமதம் ஏற்படலாம். உடல்நலத்தில் குறிப்பாக வயிறு சார்ந்த பிரச்னைகளில் கவனம் தேவை. பிள்ளைகள் காரணமாக அலைச்சலும் செலவுகளும் ஏற்படலாம். வியாபாரத்தில் நிலைமை வழக்கம்போல இருக்கும்.

மகரம் :

பிற்பகலுக்குப் பிறகு தொடங்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். தாயின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். நண்பர்களின் உதவி கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.

கும்பம் :

தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. குடும்ப பொறுப்புகளை திறமையாக கையாளுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கும்.

மீனம் :

பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகள் காரணமாக நிதி அழுத்தம் ஏற்படலாம். குடும்ப முடிவுகளில் அவசரப்படாமல் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களை சரியாக வழிநடத்துவது முக்கியம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *