தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தவெக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், இரண்டிலும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
இதுபோக, சென்னையில் பெரும்பாலான இடங்களையும் தவெக கைப்பற்றியிருக்கிறது. இப்படியான அபார வெற்றிக்கு, சினிமா நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யா, “மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது.
தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.