கருணாநிதி முதல்வரான தொகுதி இது!; தவெக சைதாப்பேட்டையை கைப்பற்றியது எப்படி? |2026 assembly election results saidapet dmk ma subramanian loss to tvk

Spread the love

அதைத் தொடர்ந்து, இம்முறையும் சைதாப்பேட்டை தொகுதியில் அவரே களமிறக்கப்பட்டார். அதிமுக கூட்டணியிலிருந்து அமமுக சார்பாக செந்தமிழன், தவெக சார்பாக அருள் பிரகாஷம், நாதக சார்பாக ஶ்ரீ வித்யா ஆகியோர் போட்டியிட்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, அமைச்சராக மா. சுப்ரமணியம் செய்த முக்கிய முன்னெடுப்புகள், தொகுதியில் அவருக்கு இருந்த நற்பெயர் ஆகியவற்றை மீண்டுமொரு முறை அவருக்கு வெற்றியை தேடித் தரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மா.சு இத்தொகுதியில் 27,727 தோல்வியைச் சந்தித்திருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. இத்தேர்தலில், சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் விஜய்யின் தவெக பெரும் அலையை உருவாக்கியிருக்கிறது.

சைதாப்பேட்டை தொகுதியிலும் அதனுடைய தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. இங்கு, தவெக வேட்பாளர் அருள் பிரகாஷம் வெற்றிப் பெற்றிருக்கிறார் . இவர் தவெக-வில் துணை பொதுச் செயலாளராக இருக்கிறார்.

மா. சுப்பிரமணியன்,1996 முதல் 2006 வரை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநகராட்சி அவைத்தலைவராக இருந்தார். பின்னர் 2006-ல் சென்னையின் 44-வது மேயராகப் பொறுப்பேற்று 2011 வரை ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.

2016 மற்றும் 2021 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்தே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 தேர்தலில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடதக்கது.

2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் ஆனார். “மக்களைத் தேடி மருத்துவம்’ போன்ற முக்கியத் திட்டங்களை இவரது அமைச்சகம் முன்னெடுத்ததுதான். தற்போது இவர் தோல்வியை தழுவி இருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *