மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், ” தவெக அரசுக்கு எதிராக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் பதிவுகள் தொடர்ந்து முடக்கப்படுகிறது.
மாற்றுக் கருத்துகளையும் விமர்சனங்களையும் வெளியிடும் பயனர்களின் கணக்குகள் முடக்கப்படுவதாகத் தங்களுக்குப் பல்வேறு புகார்கள் மற்றும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

எந்தவொரு அரசும் அல்லது அரசியல் கட்சியும் விமர்சனத்தைக் கண்டு அஞ்சக் கூடாது. அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிப்பதற்காக எந்தவொரு குடிமகனும் தனது டிஜிட்டல் குரலை இழக்க நேரிடக்கூடாது.