புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் யாருக்கு என்னென்ன துறைகள்? \ Puducherry: Who gets which portfolios in Chief Minister Rangasamy’s cabinet?

Spread the love

முதல்வர் ரங்கசாமிக்கு திட்டம் மற்றும் நிதித்துறை, பொது நிர்வாகம், சுகாதாரத்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், வருவாய் மற்றும் கலால், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, வஃபு வாரியம், உள்ளாட்சி நிர்வாகம், போக்குவரத்து, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், கிராமம் மற்றும் நகரமைப்பு, தீயணைப்பு, செய்தி மற்றும் விளம்பரத்துறை போன்ற இலாகாக்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல, பா.ஜ.கவைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, உள்துறை, மின்சாரம், கல்வித்துறை, வனம் மற்றும் வனவிலங்குத்துறை போன்றவை ஒதுக்கப்பட்டிருக்கின்றன. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவுக்கு, பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை, மீன் வளம் மற்றும் மீனவர் நலம் போன்ற துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

ரங்கசாமி, கைலாஷ்நாதன்

ரங்கசாமி, கைலாஷ்நாதன்

அதேபோல என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் ராஜவேலுக்கு, ஆதிதிராவிடர் நலம், கலை மற்றும் பண்பாடு, வீட்டு வசதி, தகவல் தொழில்நுட்பம், எழுதுபொருள், அரசு அச்சகம், பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அமைச்சர் வி.பி.சிவக்கொழுந்துக்கு, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மையினர் நலன் போன்ற துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

காரைக்காலைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சர் ஜி.என்.எஸ் ராஜசேகரனுக்கு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்டத் துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *