தெலுங்கில் அனுபமா பரமேஸ்வரனுக்கு “கிரேஸி கல்யாணம்’ படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது.
அனுபமா பரமேஸ்வரன், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவில், “யாரோ ஒருவரின் அனுமதிக்கும், தலைப்பிற்கும் காத்திருக்கத் தேவையில்லை.
என் அமைதியைக் கண்டடைய சில முடிவுகளைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. இனிப் பயமில்லை, என்னுடைய குரலை நான் தேர்ந்தெடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார்.