இன்ஸ்டா புரொஃபைலை ஆர்ட் கேலரி மாதிரி அடுக்கலாம்! மெட்டாவின் ‘கிரிட் ரீஆர்டர்’ ஃபீச்சர் | Instagram grid reorder new meta feature

Spread the love

இன்ஸ்டாகிராம் பயனர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்கள் பல காலமாக கேட்டுவந்த ஒரு முக்கியமான அம்சம், இப்போது நிஜமாகியிருக்கிறது. இனி உங்கள் இன்ஸ்டாகிராம் புரொஃபைல் பக்கத்தை ஒரு காலவரிசைப்படி மட்டும் பார்க்க வேண்டியதில்லை; உங்களுக்குப் பிடித்ததுபோல, ஒரு ஆர்ட் கேலரியை அலங்கரிப்பதை போல மாற்றி அமைக்கலாம்.

மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமிற்காக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘கிரிட் ரீஆர்டர்’ (Grid Reorder) என்ற புதிய அம்சத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதுவரை இன்ஸ்டாகிராமில் நாம் பதிவிடும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள், பதிவேற்றப்பட்ட தேதியின் அடிப்படையில் காலவரிசைப்படி (Chronological Order) மட்டுமே புரொஃபைல் பக்கத்தில் தெரியும். இதனால், ஒரு கிரியேட்டர் தனது சிறந்த படைப்பை முன்னிலைப்படுத்த விரும்பினால், அதை மீண்டும் பதிவிட வேண்டும் அல்லது ஸ்டோரியில் பின் செய்ய வேண்டும்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில்தான் இந்த புதிய “டிராக் & டிராப்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனர்கள் தங்கள் புரொஃபைலில் உள்ள எந்தவொரு போஸ்ட்டையும் தேர்ந்தெடுத்து, அதை இழுத்து (Drag) தங்களுக்கு விருப்பமான இடத்தில் வைத்துக்கொள்ள முடியும். இது பயனர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு புதுவிதமான சுதந்திரத்தைக் கொடுக்கிறது.

இந்த ஃபீச்சர்ல அப்படி என்ன ஸ்பெஷல்?

இது குறிப்பாக கன்டென்ட் கிரியேட்டர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் பிசினஸ் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். ஒருவரின் புரொஃபைலுக்குள் நுழையும்போது கிடைக்கும் அந்த முதல் அபிப்ராயம் (first impression) தான் எல்லாமே. இந்த வசதியைப் பயன்படுத்தி, அவர்கள் தங்கள் சிறந்த படைப்புகள், அதிகம் விற்பனையாகும் பொருள்கள் அல்லது தங்களின் பிராண்ட் கதையைச் சொல்லும் பதிவுகளை வரிசையாக மேலே கொண்டு வரலாம். இது அவர்களின் வருமானத்திற்கு நேரடியாக உதவும் ஒரு கருவியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

இன்ஸ்டாகிராம்  (Instagram)

இன்ஸ்டாகிராம் (Instagram)

சரி, இதை எப்படி பயன்படுத்துவது?

ரொம்பவே சிம்பிள். உங்கள் இன்ஸ்டாகிராம் புரொஃபைல் பக்கத்திற்குச் செல்லுங்கள். அங்கே நீங்கள் வரிசையை மாற்ற விரும்பும் ஏதேனும் ஒரு போஸ்ட்டை அழுத்திப் பிடித்தால் (press and hold), ஒரு பாப்-அப் மெனு தோன்றும். அதில் ‘Reorder Grid’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால் போதும். இப்போது உங்கள் புரொஃபைலில் உள்ள எல்லா போஸ்ட்களையும் உங்களுக்கு விருப்பமான இடத்திற்கு இழுத்துச் சென்று மாற்றி அமைக்கலாம்.

நீங்கள் செய்த மாற்றங்கள் உடனடியாக லைவ் ஆகிவிடும். ஒரு முக்கியமான விஷயம், இந்த மாற்றம் உங்கள் புரொஃபைல் பக்கத்தின் தோற்றத்தை மட்டுமே பாதிக்கும். உங்கள் போஸ்ட்டின் அசல் தேதி, லைக்ஸ், கமென்ட்ஸ் போன்ற எதிலும் எந்த மாற்றமும் ஏற்படாது.

மொத்தத்தில், இந்த புதிய அம்சம் பயனர்களுக்குத் தங்கள் டிஜிட்டல் அடையாளத்தின் மீது அதிக கட்டுப்பாட்டையும், தங்களை தனித்துவமான வழிகளில் வெளிப்படுத்திக் கொள்ள சுதந்திரத்தையும் வழங்குகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *