எவரெஸ்ட் அடிவார முகாமைச் சென்றடைந்த தந்தையும் மகனும், அங்கு இந்திய தேசியக் கொடியைப் பிடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, கரூருக்குத் திரும்பிய சிறுவன் துருவின் சாதனையைப் பாராட்டி, திருக்குறள் பேரவை, கரூர் வரலாற்றுப் பாதுகாப்புச் சங்கம், ரோட்டரி ஏஞ்சல், சேவா பாரதி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிறுவன் துருவ்,
“எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்த அனுபவம் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மலையேற்றப் பயணம் எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையும் அளித்துள்ளது. இப்போது எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்துள்ளேன். வரும் காலத்தில் எவரெஸ்ட் சிகரத்தை அடைவதே எனது அடுத்த இலட்சியம். அந்த லட்சியத்தையும் அடைவேன்” என்றார்.