International
oi-Halley Karthik
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கிறார். இவருக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கேட்டிருந்தனர். இந்நிலையில் இதற்கான உத்தரவை தற்போது அந்நாட்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
கடந்த 2023ம் ஆண்டு முதல் இம்ரான் கான் சிறையில்தான் இருக்கிறார். அவருக்கு கண் பார்வை பிரச்சனை, உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள் இருக்கின்றன. எனவே அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று அவரது கட்சியான ‘பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப்’ (PTI) கட்சியினர் வலியுறுத்தியிருந்தனர். இப்படி இருக்கையில் பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

அடுத்த 48 மணி நேரத்திற்குள் அவரை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும், செப்.16 வரை அவர் அங்கேயே தங்கி சிகிச்சை பெறலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இம்ரான் கானின் தனிப்பட்ட மருத்துவர் மற்றும் அவரது சகோதரி உமா கான் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் அடங்கிய மருத்துவக்குழுவை அமைக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சிறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இம்ரான் கானை அவரது குடும்பத்தினர் வாரத்திற்கு ஒருமுறை சந்திக்கவும் நீதிமன்றம் அனுமதியளித்திருக்கிறது.
இம்ரான் கானுக்கு.. அவர் கைது செய்யப்பட்டபோதே மெல்ல கொல்லும் விஷத்தை சிறை உணவில் கலந்து அவருக்கு கொடுத்து வருவதாக இம்ரான் கானின் உறவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இம்ரான் கானின் மகன்கள் மற்றும் சகோதரிகள்.. அவர் அடைக்கப்பட்டிருக்கும் அடில சிறை அறை மிகவும் மோசமான சுகாதாரமற்ற சூழலில் இருப்பதாகவும் அவரை தனிமைப்படுத்தி வைத்திருப்பது அவரது உடல்நிலையை குலைத்து உயிரை பறிக்கும் முயற்சியே என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.
கடந்த வாரங்களில் இம்ரான் கான் சிறையிலேயே இறந்துவிட்டாக வதந்திகள் பரவியபோது அவரது சகோதரிகள் இது குறித்து ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மீது நேரடியாக குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

