இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் ஓராண்டு நிறைவு | Paranthu Po Movie One Year Celebration

Spread the love

திரைப்பட வெளியீட்டிற்கு முன்பிருந்தே தன் சிறகுகளை விரித்து, தனக்கான இடத்தையும், அங்கீகாரத்தையும் ‘பறந்து போ’ அள்ளிக்கொண்டது. ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம், அங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதன் பிறகு டெல்லியில் நடைபெற்ற ஹாபிடேட் திரைப்பட விழா, சென்னை திரைப்பட விழா எனப் பல அரங்குகளிலும் மேடையேறியது. முக்கியமாக, சென்னை திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதையும் இப்படம் வென்றது. அதோடு,

2025-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகளில், சிறந்த இயக்குநருக்கான விருதையும் இயக்குநர் ராம் பெற்றிருக்கிறார். இப்படியான அங்கீகாரங்களோடு, திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு ‘ஜியோ ஹாட்ஸ்டார்’ தளத்தில் வெளியான இந்த ‘பறந்து போ’, ஒவ்வொரு இல்லங்களில் இருக்கும் பெற்றோர்களுக்கும் அத்தனை நெருக்கமானது.

Parandhu Po  | பறந்து போ

Parandhu Po | பறந்து போ

எப்போதுமே இயக்குநர் ராமின் படைப்புகள், சமகால இயக்குநர்களுக்கும், அடுத்த தலைமுறை இயக்குநர்களுக்கும் ஒரு மாஸ்டர் கிளாஸ்தான்.

‘பறந்து போ’ படத்தின் வணிக ரீதியான வெற்றி, குழந்தைகளுக்கான சினிமாவுக்கு மார்க்கெட் இல்லை என ஒதுங்கி வைக்கப்பட்ட பல இயக்குநர்களின் கதைகளுக்கும் சிறகு முளைத்து, தனக்கான இடத்தைத் தேடிக்கொள்ளவும் கூண்டைத் திறந்து வைத்திருக்கிறது.

பறவைகளுக்கு முடிவு எல்லை கிடையாது என்பதைப் போல, இந்த ‘பறந்து போ’ எல்லைகள் தாண்டி, காலம் கடந்தும் பேசப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *