இரண்டாவதும் பெண் குழந்தை… பிறந்த அன்றே புதைக்கப்பட்ட கொடூரம் – தந்தை, தாத்தா உட்பட 3 பேர் கைது!

Spread the love

தந்தை நாகபாண்டி

தந்தை நாகபாண்டி

கிருஷ்ணன்

கிருஷ்ணன்

போலீஸார் நடத்திய விசாரணையில் வீட்டிலேயே குழந்தை பிறந்ததும் பின்னர் அந்த குழந்தையை வீட்டின் பின்புறத்தில் புதைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து நாகபாண்டியின் வீட்டிற்கு சென்ற நகர் காவல் நிலைய போலீஸார் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் அதனை வளர்ப்பது சிரமம் எனக் கூறி, இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை நாகபாண்டி, அவரது தந்தை கிருஷ்ணன் (66) மற்றும் சகோதரி முனீஸ்வரி (36) ஆகியோர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

குழந்தையின் பிரேத பரிசோதனைக்கு பின்னரே குழந்தை இறந்து பிறந்ததா அல்லது உயிருடன் புதைக்கப்பட்டதா என்பது குறித்து முழுமையாக தெரியவரும். இந்நிலையில் குழந்தையின் இறப்பினை மறைத்து அதனை வீட்டில் புதைத்தது தொடர்பாக குழந்ந்தையின் தந்தை நாகபாண்டி, அவரது தந்தை கிருஷ்ணன், சகோதரி முனீஸ்வரி ஆகிய மூவரையும் ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். பிறந்த அன்றே பச்சிளம் குழந்தை உயிரிழந்த கொடூர சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *