இரும்பில் செய்த மீன் பொம்மை… சமையலில் சேர்த்தால் ரத்தச்சோகை சரியாகுமா? | Iron Fish Toy… Will Adding It to Cooking Cure Anemia?

Spread the love

இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கான சரியான காரணத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப சிகிச்சையையும் இரும்புச்சத்துள்ள உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இரும்புச்சத்துள்ள உணவுகள் என்று வரும்போது சிக்கன், மட்டன், மீன், ஈரல், முட்டை போன்றவற்றைச் சாப்பிடுவது பலன் தரும். 

தாவர உணவுகளில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்தை “நான்ஹீம்’ அயர்ன் (Non-Heme Iron) என்று சொல்வோம். இவற்றிலிருந்து உடலுக்குக் கிடைக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைவாகவே இருக்கும். ஆனாலும், இவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். 

கொள்ளு, கொண்டைக்கடலை, ராஜ்மா, பச்சைப் பயறு, சோயா பீன்ஸ், டோஃபு, கீன்வா, எள், நட்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

முருங்கைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, அகத்திக்கீரை போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வது இரும்புச்சத்துக் குறைபாட்டைச் சரி செய்ய உதவும். பாரம்பர்ய உணவுகளான கறுப்பு உளுந்து லட்டு, எள்ளுப் பொடி, கொள்ளுச் சட்னி, முளைக்கட்டிய பயறு வகைகள், முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துச் செய்த ராகி அடை,  கறிவேப்பிலைப் பொடி போன்றவற்றையும் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். 

காபி, டீ அதிகம் குடிப்பவராக இருந்தாலோ, இரும்புச்சத்து மாத்திரைகளோடு, கால்சியம் மாத்திரைகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டாலோ இரும்புச்சத்து உட்கிரகிக்கப்படுவது தடைப்படலாம்.

காபி, டீ அதிகம் குடிப்பவராக இருந்தாலோ, இரும்புச்சத்து மாத்திரைகளோடு, கால்சியம் மாத்திரைகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டாலோ இரும்புச்சத்து உட்கிரகிக்கப்படுவது தடைப்படலாம்.
விகடன்

இரும்புச்சத்து உடலில் சரியாக உட்கிரகிக்கப்பட வேண்டும் என்றால், அத்துடன் வைட்டமின் சி சத்தும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். கீரை சாப்பிடும்போது அதில் எலுமிச்சைப்பழச்சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

முளைக்கட்டிய சாலட் சாப்பிடும்போது அத்துடன் நெல்லிக்காய், எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்துக் கொள்ளலாம். குடமிளகாய் சட்னி, நெல்லிக்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவற்றைச் சாப்பிடலாம்.

பழங்களில் கொய்யாப்பழம், கிவி போன்றவை சிறந்த சாய்ஸ். உணவுப் பொருள்களை ஊறவைப்பது, முளைக்கட்டச் செய்வது, புளிக்க வைப்பது, இரும்புப் பாத்திரத்தில் சமைப்பது என எல்லாமே இரும்புச்சத்துக் குறைபாட்டைச் சரி செய்ய உதவும்.

ஆனால், இவை எல்லாவற்றையும் செய்துவிட்டு, நீங்கள் காபி, டீ அதிகம் குடிப்பவராக இருந்தாலோ, இரும்புச்சத்து மாத்திரைகளோடு, கால்சியம் மாத்திரைகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டாலோ இரும்புச்சத்து உட்கிரகிக்கப்படுவது தடைப்படலாம்.

அதேபோல அளவுக்கதிகமான நார்ச்சத்து கொண்ட உணவுப்பழக்கமும் தவிர்க்கப்பட வேண்டும். உதாரணத்துக்கு, கீரை. அதை அளவோடு எடுத்துக்கொண்டால் பிரச்னையில்லை. அளவுக்கதிகமாக எடுக்கும்போது இதிலுள்ள ஃபைட்டேட், இரும்புச்சத்து உட்கிரகிப்பைத் தடுக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *