‘காதல் மனம் காண்போம்
எண்ணம்போல் இன்பத்தின் வண்ணங்கள்’ ன்னு பாடி ஆஆஆஆன்னு தீபன் சக்கரவர்த்தி …ஆலாபனை செயயறப்ப
அப்பப்பா… உள்ளம் கொள்ளைப் போகும்.
‘தாழம் பூவில்
கல்யாண ஓலை தந்து
தங்கத் தேரில் ஊர்வலம்
நாளை வந்து…’இப்படி
தூங்கிக் கொண்டிருந்த
நாயகனை எழுப்பி
தன்கனவின் ஏக்கத்தை(மனசுக்குள் புகுந்து) பாடும்உமா ரமணன்
ஆரிராரோ ஆராரிராரோ..
.ஆரிராரோ ஆராரிராரோ…
ஆரிராரோ ஆராரிராரோ.. ன்னு முடிப்பார்
இருவரும் சேர்ந்து பாடி உறங்குவர்
இந்த மாதிரி ஒரு பாடலை
இனி மேலும்
யாராவது
இசையமைக்கமுடியுமா?
பாடல் முழுதும் மென்மையா மிருதங்கம் தபேலா …இசைஞானிக்கே உரித்தான புல்லாங்குழல்…
ஆங்காங்கே வயலினும், மிருதங்கமும் பேசிக்கொள்ளும் …அது தனிஅழகு.
படத் தலைப்பைப் போலவே…
மெல்ல மெல்ல கைகளில் ஏந்திக் கொள்ளும்….
இப்படிப்பட்ட பாடல்களை தொலைத்துவிட்டு
இரைச்சலில் நசுங்கி கிடக்கிறது
இந்த தலைமுறை.
வயதானாலும்
பருவங்கள் மாறினாலும்
இப்படிப்பட்ட பாடல் மீது
கொண்ட காதல்
உயிர்ப்போடு இருந்தால்…
இந்த பிரபஞ்சமே நம்மை
அரவணைத்துக் கொள்ளும்.
என்றென்றும் அன்புடன்,
ஆதிரை வேணுகோபால்.
பி.கு(நன்றி சசி அண்ணி பள்ளி நாட்களை நினைவு படுத்தியதற்கு)