இஸ்ரேலில் ட்விஸ்ட்.. அடுத்த பிரதமர் யார்? நெதன்யாகு – காடி ஐசன்கோட் சந்திப்பு.. அரபு கட்சிகள் அவுட்? | Israel PM Benjamin Netanyahu meets with Gadi Eisenkot and wants to unity government

Spread the love

International

oi-Nantha Kumar R

டெல்அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அரபு கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி தலைவர் காடி ஐசன்கோட் கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் தான் பெஞ்சமின் நெதன்யாகு – காடி ஐசன்கோட்டை திடீரென்று சந்தித்தது பற்றி ஒற்றுமை அரசு அமைப்பது பற்றியும் பேசி இருப்பது கவனம் பெற்றுள்ளது. இதனால் அரபு கட்சிகளை ஒதுக்கிவிட்டு நெதன்யாகு – காடி ஐசன்கோட் ஆகியோர் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றுகின்றனரா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ‘லிகுட்’ கட்சி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இருப்பினும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

Israel PM Benjamin

நெதன்யாகுவின் ‘லிகுட்’ கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 53 இடங்கள் கிடைத்துள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 120 இடங்கள் உள்ளன. இதனால் மெஜாரிட்டிக்கு 61 இடங்கள் தேவை. ஆனால் நெதன்யாகுவின் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

அதேபோல் எதிர்க்கட்சியான் ‘யாஷர்’ கட்சியின் தலைவரும், முன்னாள் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தலைவருமான காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணிக்கு 48 இடங்களும், அரபுகட்சிகளுக்கு 19 இடங்களும் கிடைத்துள்ளன. நெதன்யாகு, காடி ஐசன்கோட் ஆகியோரில் யார் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றாலும் அரபு கட்சிகளின் ஆதரவு தேவையாக உள்ளது. ஆனால் இருதலைவர்களும் அந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனால் இஸ்ரேலில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையே தான் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 12ம் தேதி பெஞ்சமின் நெதன்யாகு – காடி ஐசன்கோட் ஆகியோர் இடையே சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது பெஞ்சமின் நெதன்யாகு இருகூட்டணியும் இணைந்து ஒற்றுமை அரசை அமைக்கலாம் என்று முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு பற்றி பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: ”எனக்கும், காடி ஐசன்கோட்டுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. நான் பிரதமராக இருந்தபோது அவர் இஸ்ரேல் பாதுகாப்பு படையை வழிநடத்தினார். கடந்த வியாழக்கிழமை இருவரும் சந்தித்து பேசினோம். இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை அரசின் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினேன்.

ஈரான் மிரட்டலை முற்றிலுமாக முறியடிக்க வேண்டிய நேரம் இது. இது ஒருவருக்கும் மட்டும் இல்லை. மொத்தமாக அனைவருக்கும் இருக்கும் பொறுப்பு. ஏனென்றால் ஈரான், இஸ்ரேலை அழிக்க தநினைக்கிறது. மீண்டும் அணுஆயுதம் தயாரிக்க முயற்சித்து வருகிறது. ஈரான் என்று கொலைக்கார அரசு எதை பற்றியும் கவலைப்படாமல் தனது சொந்த மக்கள் இறந்தாலும் பரவாயில்லை என்று அணுஆயுதம் தயாரிக்கும் ஈரான் அதனை நமக்கு எதிராக பயன்படுத்தவும் தயங்காது.

இதனால் எந்த கோரிக்கையும் இன்றி ‘ஒற்றுமை’ அரசு அமைக்க ஒரே அறைக்குள் பேச்சுவார்த்தைக்குள் நுழைய வேண்டும்” என காடி ஐசன்கோட் கூட்டணிக்கு நெதன்யாகு கோரிக்கை வைத்துள்ளார். இருப்பினும் நெதன்யாகுவின் கோரிக்கையை ஏற்க காடி ஐசன்கோட் தயங்குவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் காடி ஐசன்கோட் எப்படியாவது இஸ்ரேல் பிரதமராக வேண்டும் என்ற நினைப்பில் உள்ளார். ஆனால் நெதன்யாகுவுடன் கூட்டணி வைத்தால் அவர் பிரதமர் பதவியை விட்டு தருவதில் சிக்கல் உள்ளது. இதனால் காடி ஐசன்கோட் தீவிர யோசனையில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் நெதன்யாகு – காடி ஐசன்கோட் இணைந்து ஒற்றுமை அரசை அமைத்த அரபு கட்சிகளை தூரம் வைக்கின்றனரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *