ஸ்டார்ஷிப்பை இயந்திரக் கைகளால் பிடித்த ஸ்பேஸ்எக்ஸ் – வரலாற்றுச் சாதனை|A Historic Catch! SpaceX Grabs Returning Starship Mid-Air

Spread the love

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், டெக்சாஸில் உள்ள தனது ஏவுதளத்தில் “ஸ்டார்ஷிப்’ விண்கலத்தை இயந்திரக் கைகள் மூலம் சனிக்கிழமை (நவம்பர் 14) வெற்றிகரமாகப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது.

ஸ்டார்ஷிப் விண்கலம் தன்னுடைய 22 மணி நேரப் பயணத்தில், பூமியை 14 முறை சுற்றி வந்ததுடன், ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் இணையச் சேவைக்காக 26 செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியது.

இந்தப் பணியை முடித்துவிட்டு மீண்டும் பூமி திரும்பியபோதுதான் இந்தச் சாதனை நிகழ்ந்துள்ளது.

மைல்கல்…

மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தில் இது ஒரு மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும்போது ஏற்படும் அதீத வெப்பத்தைத் தாங்கிப் பிழைத்த இந்த விண்கலம், ‘ஸ்டார்பேஸ்’ தளத்தின் லான்ச் பேட் 2-க்கு மேலே உள்ள ‘சாப்ஸ்டிக்ஸ்’ எனப்படும் இரண்டு பிரமாண்ட இயந்திரக் கைகளால் பத்திரமாகப் பிடிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *