சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரும் சுமார் 4 பில்லியன் டாலர் ராணுவ நிதியுதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.
இது குறித்து அமெரிக்க (மிச்சிகன்) செனட்டர் அப்துல் எல்-சையத்திடம் நேர்காணல் ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “சர்வதேசச் சட்டத்தை நாம் பின்பற்றுகிறோம் என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? இது வெறும் இஸ்ரேல் பற்றியது மட்டுமல்ல.

எகிப்து, ஜோர்டான், பாகிஸ்தான்…
எனது குடும்பம் புலம்பெயர்ந்து வந்த எகிப்து நாட்டிற்கும் நான் இதையேதான் பொருத்திப் பார்க்கிறேன். பாகிஸ்தான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கும் நான் இதே அணுகுமுறையைத்தான் கையாள வேண்டும்.
சர்வதேசச் சட்டங்களைச் செயல்படுத்துவதில் நாம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.