ஒருவேளை, தேர்தலுக்குப் பின்னான கணிப்புகளின்படி, பிரதான இரு கட்சிகளுமே தலா 51 இடங்களை மட்டுமே பிடித்தால், பெரும்பான்மை பெற அரபுக் கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியதாக இருக்கும்.
அரபுக் கட்சி என்பது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கட்சி ஆகும். இவர்களின் ஆதரவை நெதன்யாகு பெற்றால், ஈரான் போர் தொடங்கி உள்நாட்டு ஆதரவு வரை அனைத்தும் பாதிக்கும்.
இதனால் நெதன்யாகு இப்போதே, ‘அரபுக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது’ என்பதை அறிவித்துவிட்டார்.

ஐசன்காட்டுக்குமே சிக்கல்தான்
ஐசன்காட்டுமே அரபுக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் சிக்கல் உண்டு. இவரும் அந்தக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் பிற கட்சிகளின் ஆதரவை இழக்கலாம்… அரசியல் ரீதியாகவும் சவால்களைச் சந்திக்கலாம். ஆனால், இவர் என்ன செய்யப் போகிறார் என்கிற முடிவு இன்னும் தெரியவில்லை.
ஒருவேளை, பெரும்பான்மை பெறுவதில் சிக்கல் நீடித்தால், நெதன்யாகுவே இஸ்ரேலின் இடைக்கால பிரதமராகத் தொடர்வதற்கான வாய்ப்புகள் உண்டு.