International
oi-Nantha Kumar R
டெல்அவிவ்: துபாய் – டெல்அவிவ் விமானத்தில் இந்திய பைலட் கேப்டனை கத்தியால்குத்திவிட்டு விமானத்தை கடத்தி தரையில் மோதி 180 பேரை கொல்ல முயன்ற சம்பவத்தில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட ஓமன் நாட்டின் துணை விமானி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை பற்றிய பிற விவரங்கள், போட்டோக்கள் வெளியாகாத நிலையில் விமான நிறுவனம் சட்ட விதிகளை மீறியதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல்அவிவ் நகருக்கு ‘ப்ளைதுபாய்’ நிறுவனத்தை சேர்ந்த விமானம் நேற்று புறப்பட்டது. விமானத்தில் 174 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என 180 பேர் இருந்தனர்.
விமானத்தை இயக்கிய இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திய ஓமன் துணை விமானி விமானத்தை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. ஒரு நிமிடத்தில் விமானம் 34 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து மின்னல் வேகத்தில் 18 ஆயிரம் அடி வரை வேகமாக தரையிறங்கியது. இதனால் அவர் விமானத்தை வேகமாக தரையில் மோதி வெடிக்க செய்து 180 பேரை கொல்ல திட்டமிட்டதாக சந்தேகம் உள்ளது.
இருப்பினும் இந்தியபைலட் ஸ்மித் மச்சார் உதவியுடன் இந்த முயற்சியை பயணிகள் வெற்றிகரமாக முறியடித்தனர். ஓமன் துணை விமானி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரது பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அ
இதற்கிடையே தான் ‘ஃப்ளே துபாய்’ விமான நிறுவனம் இஸ்ரேலின் சட்ட விதிமுறைகளை மீறியதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இஸ்ரேல் நாட்டின் சட்டம் முக்கிய விஷயத்தை கூறுகிறது. உலகில் எந்த பகுதியில் இருந்தும் இஸ்ரேலுக்கு விமானத்தை இயக்க வேண்டும் என்றால் அந்த விமான நிறுவனம் இஸ்ரேல் நாட்டுடன் நல்ல உறவில் உள்ள நாடுகளை சேர்ந்த பைலட்டுகளை தான் பணியமர்த்த வேண்டும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு நேற்றைய தினம் ‘ஃப்ளைதுபாய்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான FZ1073 என்ற விமானம் துபாயில் இருந்து டெல்அவிவ் நகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தை மும்பையை சேர்ந்த ஸ்மித் மச்சார் மற்றும் ஓமன் நாட்டை சேர்ந்த பைலட் ஆகியோர் இயக்கினர். இதில் ஸ்மித் மச்சார் கேப்டனாகவும், ஓமன் நாட்டை சேர்ந்த பைலட் துணை விமானியாகவும் பணியாற்றினார்.
இதில் இஸ்ரேல் நாட்டுடன் இந்தியாவுக்கு நல்லுறவுடன் உள்ளது. இருநாடுகள் இடையே பிரச்சனைகள் எதுவும் இல்லை. இதனால் இந்திய பைலட் கேப்டன் ஸ்மித் மச்சார் பைலட்டாக இருந்ததில் பிரச்சனை இல்லை. ஆனால் ஓமன் நாட்டுடன், இஸ்ரேலுக்கு நல்ல உறவு இல்லை. இருநாடுகள் இடையே பிரச்சனை உள்ளது. இருநாடுகள் இடையே தூதரக ரீதியாகவும் எந்த உறவும் இல்லை.
இப்படியான சூழலில் ‘ப்ளைதுபாய்’ விமான நிறுவனம் இஸ்ரேல் நாட்டுக்கான விமானத்தில் ஓமன் பைலட்டை துணை விமானியாக நியமித்துள்ளது. இது அப்பட்டமான சட்ட விதிமீறல் என்று இஸ்ரேல் தரப்பில் சொல்லப்படுகிறது.
இதுபற்றி இஸ்ரேல் போக்குவரத்து துறை அமைச்சர் மிர்சி ரெகேவ் கூறுகையில், ”ஓமன் பைலட் பணியில் இருந்ததாக கூறப்படும் விவகாரத்தில் இஸ்ரேல் உடனான் விமான ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் மீறியதா? என்பது பற்றி விசாரிக்க வேண்டும். இது நடந்து இருந்தால் அப்பட்டமான விதிமீறல் ஆகும்” என்று கூறியுள்ளார்.
அதேவேளையில் ஓமன் நாட்டை சேர்ந்த பைலட் இரட்டை குடியுரிமை பெற்று இருக்கலாம். ஓமன் நாடு மட்டுமின்றி இன்னொரு நாட்டின் குடியுரிமையையும் அவர் பெற்றிருக்கலாம். இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘ப்ளைதுபாய்’ நிறுவனம் அவரை அனுமதித்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது ஓமன் நாட்டை சேர்ந்த பைலட் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையின் முடிவில் தான் என்ன நடந்தது? இஸ்ரேல் நோக்கி செல்லும் விமானத்தை ஓமன் துணை விமானி இயக்கியது எப்படி? என்பது பற்றிய விவரம் வெளியாகும்.


