இஸ்லாமிய பெண்கள் மசூதிக்கு தொழுகைக்காக செல்ல தடையில்லை: அகில இந்​திய முஸ்​லிம் தனி​நபர் சட்ட வாரி​யம் – Kumudam

Spread the love

மசூ​தி​களில் பெண்​கள் நுழைய அனு​மதி கோரி புனேவைச் சேர்ந்த யாஸ்​மின் ஜுபெர் அகமது பீர்​ஜாடே, அவரது கணவர் ஜுபெர் ஆகியோர் தாக்​கல் செய்த மனு​வின் மீது  உச்ச நீதி​மன்​றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலை​மையி​லான 9 நீதிப​தி​கள் கொண்ட அரசி​யல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது.  இந்த விசா​ரணை​யின் போது, ‘‘உண்​மைத் தன்​மை​யைத் தெளிவுபடுத்​திக் கொள்​ளக் கேட்​கிறோம். மசூ​திக்​குள் இஸ்லாமிய பெண்​கள் நுழைய அனு​ம​திக்​கப்​படு​கிறார்​களா?’’ என்று தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முஸ்​லிம் தனி​நபர் வாரி​யத்​தின் மூத்த வழக்​கறிஞர் எம்​.ஆர்.ஷம்​ஷாத்: இஸ்லாமிய பெண்​கள் மசூ​திக்​குள் நுழைவ​தில் இஸ்​லாமியப் பிரி​வினரிடையே எந்​தக் கருத்து வேறு​பாடும் இல்​லை. ஆனால், அங்கு பின்​பற்​றப்பட வேண்​டிய சில ஒழுங்​கு​முறை​கள், விதி​கள் உள்​ளன. அவர்கள் மசூ​திக்​குள் நுழைய​லாம் என்​றாலும், ஆண்​கள் செல்​லும் பிர​தான வாசல் வழி​யாகவே நுழைய வேண்​டும் என்​றோ, ஆண்​களுக்​கும் பெண்​களுக்​கும் இடையே தடுப்பு இருக்​கக் கூடாது என்றோ கட்​டாயப்​படுத்த முடி​யாது.

ஆண்​கள் மசூ​திக்​குச் சென்று தொழு​வது கடமை​யாக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், முஸ்​லிம் பெண்​களுக்கு வீட்​டில் இருந்து தொழு​வதே சிறந்​தது என்று கூறப்​பட்​டுள்​ளது. இதற்​குக் காரணம், ஆண்​கள் தொழுகை நடத்​தச் செல்​லும் போது குழந்​தைகளைப் பராமரிக்க பெண்​கள் வீட்​டில் இருக்க வேண்​டிய தேவை இருக்​கலாம் என்​ப​தாகும்.‘‘பெண்​கள் மசூ​திக்கு வரு​வதைத் தடுக்க வேண்​டாம்’’ என்று இறை தூதர் முகமது நபியே கூறி​யுள்​ளார். பெண்​கள் மசூ​திக்கு வந்​தால் அவர்​களுக்கு உரிய அனு​மதி வழங்​கப்பட வேண்​டும், ஆனால் பாரம்​பரிய நடை​முறை​கள் மதிக்​கப்பட வேண்​டும். இவ்​வாறு வழக்​கறிஞர் ஷம்​ஷாத் தெரி​வித்​தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *