ஈரானிடம் சரணடைந்த சவுதி – பாகிஸ்தான் – துருக்கி! ஹவுதிகளின் தாக்குதலை நிறுத்த கெஞ்சல் | Mecca pact countries wants to stop Houthis attacks on Saudi Arabia and speaks with Iran

Spread the love

International

oi-Nantha Kumar R

டெஹ்ரான்: சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் பயந்துபோன சவுதி அரேபியா ‘மெக்கா’ ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான், துருக்கியை உதவுக்கு அழைத்தும் எந்த பலனும் இல்லை. இதனால் வேறு வழியின்றி சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 3 நாடுகளும் ஈரானிடம் சரணடைந்துள்ளன. ஹவுதிகளின் தாக்குதலை நிறுத்த உதவும்படி ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன.

mecca-pact-countries-wants-to-stop-houthis-attacks-on-saudi-arabia-and-speaks-with-iran

இந்த பேச்சுவார்த்தையில் சவுதி அரேபியா சார்பில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தம்பியும், பாதுகாப்பு துறை அமைச்சருமான பகாலித் பின் சல்மான், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர், துருக்கி உளவுத்துறையின் தலைவர் இப்ராஹிம் காலின் ஆகியோர் ஈரானுக்கு சென்று உதவி கோரியுள்ளனர்.

இவர்கள் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஷின் ரெசாய் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்த சமயத்தில் சவுதி அரேபியா மீதான ஹவுதிகளின் தாக்குதலை நிறுத்த வேண்டும்.

ஹவுதிகளின் தாக்குதல் என்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தை பதற்றத்தை அதிகரித்து வருகிறது. இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். இதனால் ஹவுதிகளின் தாக்குதலை நிறுத்த உதவ வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு ஈரான் உதவி செய்வதாக கூறியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *