`கரூர்லயே அவரை முடித்திருக்க வேண்டும் என பேசும் அளவுக்கு.!’ – அமைச்சர் நிர்மல் குமார் காட்டம் | Nirmal Kumar has met with reporters to speak about the arrest of Anbil Mahesh.

Spread the love

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரம் மற்றும் முன்னாள் பள்ளிப் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தேனி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணை கைதிகளில் ஒருவர் வலிப்பு வந்தது போல நாடகமாடி, அதைப் பார்க்க வந்த காவலர்களைக் கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இது தொடர்பாக இரவு முழுவதும் நடைபெற்ற தீவிரத் தேடுதல் வேட்டையில் இதுவரை 4 பேர் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 13 பேரையும் பிடிக்க வனப்பகுதிகள் மற்றும் கேரளா எல்லை உட்பட அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

சிறையில் பாதுகாப்பு குறைபாடுகள் அல்லது வாகன சோதனையில் சிக்கல்கள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய டிஜிபி சந்தீப் ரத்தோர் மற்றும் ஐஜி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளிக்கு பாதுகாப்புச் சான்றிதழ் வழங்குவதில் “பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து ஊழல் செய்த வழக்கில், முன்னாள் பள்ளிப் கல்வித்துறை அமைச்சர் நேற்று நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். என்.ஜி.ஓ-க்கள், கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் டிரஸ்ட்டுகள் நடத்தும் பள்ளிகளை மிரட்டி இந்தத் தொகை பெறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *