ஈரானிடம் ரகசியமாக உள்ள ஆயுதங்கள்! கணிக்க முடியாமல் திணறும் அமெரிக்க உளவு அமைப்புகள்..பின்னணி | Iran retains an estimated 1,500 to 2,500 missiles in its arsenal despite months of US strikes

Spread the love

International

oi-Mani Singh S

வாஷிங்டன்: அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து 8 மாதங்களாக ஈரான் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்தினாலும் அந்த நாட்டிடம் இன்னும் 1,500 முதல் 2,500 ஏவுகணைகள் வரை கையிருப்பில் இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில், ஈரானிடம் தற்போது எத்தனை ஏவுகணைகள் ஏவுவதற்குத் தயாராக உள்ளன, எத்தனை ஏவுகணைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஈரானிடம் கணிசமான அளவில் ஏவுகணைகள் தொடர்ந்து இருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Iran retains an estimated 1 500 to 2 500 missiles in its arsenal despite months of US strikes

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க நிபந்தனை

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா போர் தொடுத்தது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தின. ஈரானின் ஆயுத கட்டமைப்புகள் மற்றும் ஏவுகணை தளங்களை குறிவைத்து சரமாரியாக தாக்குதலில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈடுபட்டன.

ஈரான் – அமெரிக்கா இடையே தற்போது நேரடி மோதல்கள் நடைபெறாமல் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் ஓய்ந்தபாடில்லை. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமெரிக்கா கூறினாலும், முடக்கப்பட்ட தங்கள் நாட்டின் சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை முன்வைத்து இருக்கும் ஈரான், அதை ஒப்புக்கொண்டால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை திறப்போம் என நிபந்தனை விதித்து வருகிறது.

ஈரானிடம் இன்னமும் 2,500 ஏவுகணைகள் கையிருப்பு

ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால், அந்த நாடு மீது பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்து வருகிறது. இப்படியாக பதற்றம் நீடித்து வரக்கூடிய நிலையில், ஈரானிடம் இன்னும் 1,500 முதல் 2,500 ஏவுகணைகள் இருக்கக் கூடும் என்று அமெரிக்க உளவு அமைப்புகள் கணித்துள்ளது. மீண்டும் தீவிர போர் ஏற்பட்டால் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மற்றும் அதன் நட்பு நாடுகளை குறிவைத்து ஈரானால் தாக்க முடியும் என்றும் அமெரிக்க உளவுத்துறை மதிப்பிட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது.

ஈரானின் ராணுவ திறன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் எல்லாம் கிட்டதட்ட தவிடுபொடியாகிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வரும் நிலையில், அதற்கு மாறாக அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பீடு அமைந்துள்ளது. ஈரானிடம் இன்னும் எத்தனை ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன?.. எத்தனை ஏவுகணைகள் சேமிப்பு கிடங்கில் உள்ளன? என்பதை உறுதியாக மதிப்பிட முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

கணக்கிட முடியாமல் திணறும் உளவு அமைப்புகள்

இருப்பினும், ஈரானிடம் கணிசமான அளவில் ஏவுகணைகள் இருக்கும் என்றும் கூறியுள்ளனர். ஈரானிடம் 1,500-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதாக இஸ்ரேல் ராணுவ அதிகாரிகளும் கூறியுள்ளனர். ஈரான் தனது ராணுவ திறன்கள் குறித்த விவரங்களை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்து இருப்பதால் அவர்களிடம் உள்ள கையிருப்பை துல்லியமாக கணக்கிடுவது சவாலான ஒன்றாகவே உள்ளது என்று உளவு அமைப்புகளும் தெரிவிக்கின்றன.

ஈரானுடன் பேச்சுவார்த்தை உடன்படாவிட்டால் தாக்குதவதற்கு அமெரிக்கா மீண்டும் தயாராக இருந்தாலும், உளவு அமைப்புகள் மதிப்பீட்டை வைத்து பார்க்கும் போது ஈரானும் கடும் சவால் அளிக்கும் என்றே தெரிகிறது. இதனால் போர் தீவிரம் அடைந்தால் மத்திய கிழக்கில் மீண்டும் உச்ச கட்ட பதற்றமும் நெருக்கடியும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதே சர்வதேச வல்லுனர்கள் கூறும் கருத்தாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *