பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை முதல்முறை மட்டுமே நடந்தது.
கடந்த ஏப்ரல் 21-ம் தேதி நடக்கவிருந்த பேச்சுவார்த்தையின் போது, இஸ்லாமாபாத்திற்கு செல்ல அமெரிக்கா தயாராகவே இருந்தது… ஆனால், ஈரான் முறுக்கிக் கொண்டது.
கடந்த வார இறுதியில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள ஈரான் தரப்பு பிரசன்ட் ஆகியிருந்தது. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க அதிகாரிகள் இஸ்லாமாபாத் செல்வதை தடுத்துவிட்டார்.
ஆனால், இஸ்லாமாபாத் சென்றிருந்த ஈரான் தரப்பு பாகிஸ்தான் மத்தியஸ்தர்களிடம் மூன்று நிலைகளை கூறியுள்ளது. மூன்று நிலைகள் என்றால் முதல் நிலை நடந்தால், இரண்டாம் நிலை நடக்கும். இரண்டாம் நிலை நடந்தால் மூன்றாம் நிலை நடக்கும்.

அந்த மூன்று நிலைகள்…
முதல் நிலை: போர் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும்… ஈரான் மற்றும் லெபனானுக்கு எதிராக மீண்டும் எந்தவொரு தாக்குதல் தொடங்கப்படாது என்கிற உறுதி வேண்டும்.
இரண்டாம் நிலை: முதல் நிலை ஒப்புக்கொள்ளப்பட்டால், இரண்டாம் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு, நிர்வாகம் குறித்து விவாதிக்கப்படும்.
மூன்றாம் நிலை: இந்த முதல் இரு நிலைகளைக் கடந்தால் தான், அணு ஆயுதம் குறித்து ஈரான் பேசும்.
ஈரானிடம் அமெரிக்கா திரும்ப திரும்ப கேட்கும் ஒன்று அணு ஆயுத உற்பத்தியை நிறுத்துவது மற்றும் ஒப்படைப்பது ஆகும். ஈரான் குறிப்பிட்டுள்ள முதல் இரண்டு நிலைகளை முடித்தால், மூன்றாம் நிலையில் அணு ஆயுதம் குறித்து பேச ஈரான் தயாராக இருக்கிறது.
ஆனால், அமெரிக்கா இதற்கு ஒப்புக்கொள்ளுமா என்பது தான் இப்போதைய கேள்வி.