ஈரான் பேச்சுவார்த்தை நடுவே Project Freedom நிறுத்திய ட்ரம்ப்|US Suspends Project Freedom During Iran Peace Talks

Spread the love

இந்திய நேரப்படி, நேற்று முன்தினம் (மே 4), அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற அமெரிக்கா உதவி செய்யும்’ என்று Project Freedom-ஐ அறிவித்திருந்தார்.

ஆனால், முழுமையாக மூன்று நாள்கள் முடிவதற்குள் தன்னுடைய பேச்சை மாற்றி பேசியிருக்கிறார் ட்ரம்ப்.

இன்று (இந்திய நேரப்படி) தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில்…

“பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளின் கோரிக்கையை ஏற்றும், ஈரான் நாட்டுக்கு எதிரான போரில் நாம் பெற்றுள்ள மிகப்பெரிய ராணுவ வெற்றிகளைக் கருத்தில் கொண்டும், ஒரு முடிவை எடுத்துள்ளோம்.

ட்ரம்ப் பதிவு

ட்ரம்ப் பதிவு

மேலும், ஈரான் நாட்டுப் பிரதிநிதிகளுடன் ஒரு முழுமையான மற்றும் இறுதிக்கட்ட ஒப்பந்தத்தை எட்டுவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இரு தரப்பினரும் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.

அதன்படி, ஈரான் மீதான கடல் வழி முற்றுகை முழு அமலில் இருக்கும் அதே வேளையில், ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ அதாவது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை வெளியேற்றும் பணி – தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *