ஈரான் போர்: "உண்மை எல்லோருக்கும் தெரியும்; நான் மட்டும் தடுத்திருக்காவிட்டால்..!" – ட்ரம்ப்

Spread the love

ஈரான் போரைத் தொடர்வதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு வேகத்தடை ஏற்பட்டுள்ளது.

என்ன காரணம்?

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி (ட்ரம்ப் கட்சியின் எதிர்க்கட்சி) பெரும்பான்மை பெற்றதே இதற்குக் காரணம்.

ஈரான் போரை ஜனநாயகக் கட்சி விரும்பவில்லை. இந்தப் போரை நிறுத்துவதற்கான முயற்சியை ஏற்கெனவே இந்தக் கட்சி நாடாளுமன்றத்தில் முன்னெடுத்தது.

ஆனால், போதிய வாக்குகள் இல்லாததால் அந்த மசோதா தோல்வியுற்றது. (இதில் நான்கு சொந்தக் கட்சியினரே வாக்களிக்கவில்லை)இப்போது ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்துவிட்டது.

இதனால், அவர்கள் ஈரான் போரை நிறுத்துவதற்கான மசோதா கொண்டுவந்தால், அது வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஆனால், ட்ரம்பிடம் வீட்டோ பவர் உள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

ட்ரம்ப் – நெதன்யாகு சிக்கல்

ஆனால், ஈரான் போரினால்தான் ட்ரம்பின் குடியரசுக் கட்சி இந்தத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதை ட்ரம்பே ஒப்புக்கொண்டுள்ளார்.

இன்னொரு பக்கம், இஸ்ரேலில் அந்த நாட்டின் தற்போதைய பிரதமர் நெதன்யாகுவுக்கும் (இன்னும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் அவரே பிரதமராகத் தொடர்கிறார்) பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால், ட்ரம்ப், நெதன்யாகு இருவரும் ஈரான் போரை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ட்ரம்ப் பதிவு

இந்த நிலையில், ‘நான் ஏன் ஈரான் மீது போர் தொடுத்தேன்’ என்று நியாயம் சொல்வது போல, தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

“நான் ஈரானை அணு ஆயுதம் தயாரிப்பதில் இருந்து தடுத்திருக்காவிட்டால் இஸ்ரேலும், ஏன் முழு மத்திய கிழக்கு பிராந்தியமே இன்று இருந்திருக்காது!

யாரும் அதை வெளிப்படையாகச் சொல்ல விரும்புவதில்லை. ஆனால் அதுதான் உண்மை என்பது அனைவருக்கும் தெரியும்!”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *