அதனால், ட்ரம்ப் எப்படியாவது இந்தப் போரை முடித்துவிட வேண்டும் என்று குறியாக உள்ளார்.
நேற்று கூட, வெள்ளை மாளிகையில் ஈரான் போர் நிறுத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நடந்த அந்தக் கூட்டத்தில், ‘ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கக்கூடாது… அமெரிக்கா சொல்லும் நிபந்தனைகளுக்கு ஈரான் கட்டுப்பட்டால் மட்டும் தான் போர் நிறுத்தம்’ என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த முடிவிற்கு ஈரான் ஒத்துவருமா என்பது தெரியாது. ஒருவேளை, ஒத்துக்கொள்ளாமல், இந்தப் போர் நீடித்தால், ட்ரம்பிற்கு வரும் நவம்பர் தேர்தலில் சவால் காத்திருக்கிறது.
ஈரான் போர் ஈரானுக்கு தலைவலியாக மாறாமல், ட்ரம்பிற்கு தலைவலியாக மாறியுள்ளது தான் யாரும் எதிர்பார்க்காத பிளாட் ட்விஸ்ட்.