ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் அருகில் ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்சிங். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ராம்சிங், அவரது இரண்டாவது மனைவி சர்க்யன் மற்றும் ராம் சிங்கின் தாயார் மற்றும் உறவினர் ஒருவர் ஆகியோர் அவர்கள் வசித்த வீட்டில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
ஆரம்பத்தில் இது விபத்து என்றே போலீஸார் நினைத்தனர். ஆனால் எரிந்து நின்ற காரை தடயவியல் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது காரின் முன்இருக்கையில் யாரும் அமர்ந்திருக்கவில்லை. அதோடு சர்க்யன் உடம்பில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸார் ராம் சிங் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது அவரது முதல் மனைவி சுனிதா தனது கணவர் அவரது தாயாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரது வாக்குமூலத்திற்கும், காரில் இறந்து கிடந்தவர்களின் நிலைக்கும் முன்னுக்கு முன்முரணாக இருந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த ராம் சிங் மைனர் மகனிடம் விசாரித்தனர்.
அதோடு வீட்டில் ரத்தக்கரையும் சுவர்களில் இருந்தது. விசாரணையில் மைனர் மகன்தான் தனது தந்தை உட்பட 4 பேரையும் கொலை செய்து இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீஸ் அதிகாரி வர்தன் கூறுகையில்,”‘ராம் சிங் சவுத்ரியின் இரண்டாவது திருமணத்தைத் தொடர்ந்து குடும்பத்திற்குள் ஆழமான பிளவு ஏற்பட்டுள்ளது. ராம் சிங் தனது மனைவியை மோசமாக நடத்தியதை கண்டு பிள்ளைகள் தந்தையிடம் வெறுப்பை வளர்த்துக் கொண்டனர். சிறுவன் வீட்டிற்குள் கட்டுப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததான். இதனால் குற்றத்தை அடிப்படையாகக் கொண்ட வெப் சீரிஸ்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அவன் தொடர்ந்து பார்ப்பதையும் ஆன்லைன் கேம்களில் நீண்ட நேரம் செலவிடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தான்.
5 மாதங்களாக திட்டம்
குற்றக் காட்சிகள், போலீஸ் நடைமுறைகள் மற்றும் குற்றவாளிகள் சாட்சியங்களை அழிக்க முயற்சிக்கும் வழிகளை அவன் ஆன்லைனில் ஆய்வு செய்துள்ளான். தனது தந்தையை கொலை செய்ய 5 மாதங்களாக திட்டமிட்டு இருப்பதாக நம்புகிறோம்” என்றார்.
போலீஸாரின் விசாரணையில் ராம் சிங்கும், அவரது இரண்டாவது மனைவியும் இரவில் பீர் குடித்து விட்டு உறங்க சென்றுள்ளனர்.