எந்தச் சட்டத்தின் கீழ்?
இந்தத் தீர்மானத்தின் இன்னொரு ஹைலைட், இது போர் சட்டம், 1973-ன் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படியென்றால், இந்தத் தீர்மானத்தின் படி, எதிரி நாட்டில் இருந்து அமெரிக்க ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று பொருள்.
முக்கியமாக, இந்தச் சட்டத்தின் படி நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு அமெரிக்க அதிபரின் கையெழுத்து தேவையில்லை. இதனால், இது ட்ரம்பிற்கு மிகப்பெரிய நெருக்கடி… பின்னடைவு.
சொந்தக் கட்சியிலேயே…
கீழவை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ட்ரம்பின் சொந்த கட்சியான குடியரசு கட்சியினரின் நான்கு பேர் ஆதரவு இருந்தது.
நேற்று மேலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 4 குடியரசுக் கட்சியினர் சாதகமாக வாக்களித்துள்ளனர். இருவர் வாக்களிக்கவே இல்லை.

வெள்ளை மாளிகை எதிர்ப்பு
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இந்தத் தீர்மானத்திற்கு வெள்ளை மாளிகை தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வந்துள்ளது. இந்தத் தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது… இது சட்டத்திற்குப் புறம்பானது என்று வாதாடுகிறார்கள்.
இதனால், வெள்ளை மாளிகை இந்தத் தீர்மானத்தை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு என்று கூறப்படுகிறது.