ஈரான் மீது நள்ளிரவில் அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதல் – 19 பேர் பலி! | US launches massive attack on Iran, kills 19

Spread the love

International

oi-Vignesh Selvaraj

தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

Iran

அமெரிக்​கா, ஈரான் இடையே கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி போர் நிறுத்​தம் வந்​தது. சுமார் ஒரு மாதத்​துக்​குப் பிறகு ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி பகு​தி​யில் அமைந்​துள்ள லராக் தீவை குறி​வைத்து அமெரிக்க போர் விமானங்​கள் ஞாயிற்​றுக்​கிழமை நள்ளிர​வில் திடீர் தாக்​குதல் நடத்​தின. அந்​தத் தீவில் அமைக்கப்பட்​டிருந்த 2 ஏவு​கணை தளங்​கள், கடல் கண்ணி வெடிகளை வீசும் கப்​பல் மற்​றும் ஏராள​மான படகு​கள் அழிக்​கப்​பட்​டன. இதில் ஈரான் ராணுவ வீரர்​கள் பலர் உயிரிழந்ததாக​வும் தகவல்​கள் வெளி​யாகின.

அமெரிக்க தாக்​குதலுக்​குப் பதிலடி​யாக ஜோர்​டானில் உள்ள இரு அமெரிக்க விமானப் படைத் தளங்​கள் மீது ஈரான் ராணுவம் திங்கட்கிழமை ஏவு​கணை​களை வீசி தாக்​குதல் நடத்​தி​யது. ஈரானின் வடக்​குப் பகு​தி​யில் இருந்து ஏவப்​பட்ட பாலிஸ்​டிக் ஏவு​கணை​கள் ஜோர்​டானின் கிங் ஹுசைன், அல் – அஸ்​ராக் விமானப்​படைத் தளங்​கள் நோக்கி சீறிப் பாய்ந்​தன. இதில் பெரும்​பாலான ஏவுகணை​கள் நடு​வானில் அழிக்​கப்​பட்​டன. சில ஏவு​கணை​கள் ஜோர்​டான் விமானப் படைத் தளங்​களில் விழுந்து வெடித்​தன.

உலகின் மிக முக்​கிய கச்சா எண்​ணெய் வழித்​தட​மாக விளங்​கும் ஹார்​முஸ் ஜலசந்தி அமெரிக்​கா​வின் கட்​டுப்​பாட்​டின் கீழ் கொண்டு வரப்​படும் என்று கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​தார். இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி அவர் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட வரைபடத்​தில், ஹார்​முஸ் ஜலசந்தி அமெரிக்​கா​வின் ஒருங்​கிணைந்த பகு​தி​யாக சித்​தரிக்​கப்​பட்டு இருந்​தது.

ஈரானும் ஓமனும் அண்​மை​யில் நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யில் முக்கிய உடன்​பாடு எட்​டப்​பட்​டது. இதன்​படி அமெரிக்​கா​வின் தலை​யீடு இல்​லாமல் இரு நாடு​களும் இணைந்து ஹார்​முஸ் ஜலசந்​தியை நிர்​வகிக்க முடிவு எடுக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்தே ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா எண்​ணெய் கப்பல்கள் கடந்து செல்​லும் ஈரானின் லாரக் தீவை குறி​வைத்து அமெரிக்கா தாக்​குதல் நடத்தி உள்​ளது.

ஹோர்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பலைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானின் பல்வேறு மாகாணங்களின் மீது புதன்கிழமை (செப்டம்பர் 2) அதிகாலை வரை அமெரிக்க படைகள் தாக்குதல்கள் நடத்தின.

இதில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் உள்ள ஹோர்மோசன் மாகாணத்தில் உள்ள சிரிக் நகரத்தில் திருமணக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற ஒரு வீட்டின் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் இந்தப் புதிய தாக்குதலில், கோஹெஸ்தாக்கில் 4 பேரும், குஸிஸ்தான் மாகாணத்தில் 7 பேரும், கெர்மன்ஷாவில் ஈரானின் புரட்சிகர காவல் படையைச் சேர்ந்த 4 வீரர்களும், லாவன் தீவில் பசிஜ் பிரிவு வீரர்கள் 3 பேரும், ஃபார்ஸ் மாகாணத்தில் ஒருவரும் என மொத்தம் 19 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்தே நடத்தப்பட்டது என அமெரிக்க அரசு விளக்கமளித்துள்ளது. ஆனால், அமெரிக்கா செய்திருப்பது போர்க்குற்றம் எனவும், இதுகுறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஈரான் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *