ஈரோடு: குடும்பத்துடன் குளிக்கச் சென்ற இடத்தில் சோகம், பரிதாபமாக பறிபோன 3 உயிர்கள்! -erode district 3 death in kaveri river near baasoor.

Spread the love

நாமக்கல் மாவட்டம் அவிநாசி பட்டியைச் சேர்ந்த தறிப்பட்டைறை தொழிலாளியான பெருமாள், மனைவி, குழந்தைகளுடன் பரமத்தி வேலூர் சித்தம்பூண்டிக்குச் சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குடும்பமாகச் சென்று காவிரி ஆற்றில் குளிக்க திட்டமிட்ட பெருமாளின் குடும்பத்தினர் , காவிரி ஆற்றின் தடுப்பணை அமைந்துள்ள பாசூர் பகுதிக்கு நேற்று மதியம் குளிக்கச் சென்றுள்ளனர்.

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் பெருமாளின் மனைவி கால் தவறி கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கிய நிலையில், காப்பாற்ற முயற்சி செய்த பெருமாளும் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் பெருமாள் உள்ளிட்ட 3 பேரை உயிருடன் மீட்க முயற்சி செய்தும் முடியாமல் போனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீரில் மூழ்கி உயிரிழப்பு

நீரில் மூழ்கி உயிரிழப்பு

இது குறித்து காவல்துறையினர், ” பெருமாள் குடும்பத்தினர் நண்பர்கள் என 6 பேர் நேற்று காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில், பிரதீபா, பாரதி, லிகித், சுஜித் ஆகிய நால்வரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு‌குளித்துள்ளனர். பிரதிபா என்பவர் வழக்கி நீரில் மூழ்கியுள்ளார். மற்ற மூவரும் அவருடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளனர்.

இதைக் கண்டுப் பதறிய பெருமாள், தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பற்ற முயற்சி செய்து அவரும் தண்ணீரில் மூழ்கியிருக்கிறார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் 5 பேரையும் மீட்டுள்ளனர். இரண்டு பேரை உயிருடன் மீட்ட நிலையில், பெருமாள், அவரின் மனைவி பிரதீபா, பாரதி ஆகிய மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *