ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள்: சிபிசிஐடி விசாரணை கோரும் சிபிஎம்|Back-to-Back Deaths at Isha? CPM Demands CB-CID Investigation

Spread the love

இதுபோன்று பல்வேறு காலக்கட்டங்களில் தங்களது பிள்ளைகளை மூளைச் சலவை செய்து ஈஷா மையக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக பெற்றோர்கள் தரப்பில் நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஈஷா யோகா மையத்தில் உள்ள மயான மேடையில் சட்டப்பூர்வமான தகவல்கள் அளிக்காமல் முறைகேடான வகையில் உடல்கள் எரியூட்டப்படுகின்றன என்ற புகார்களும் இந்த மையத்தின் மீது உள்ளது.

இந்த மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ஒன்றிய அரசின் உச்சபட்ச தலைவர்களுடனும், ஆட்சியாளர்களுடனும், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்புகளில் உள்ளதால் வழக்கு விசாரணைகளை நீர்த்துப் போகச் செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து வருவதாகவும் பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆன்மீகத்தின் பெயரால் ஈஷா மையத்தின் செயல்பாடுகள் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது.

எனவே, ஈஷா மையத்தில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த மரணங்கள், ஏற்கனவே நடந்துள்ள சந்தேக மரணங்கள் குறித்து விசாரிப்பதற்கும், ஏற்கனவே இந்த மையத்தின் மீது போதைப் பொருள், நில மோசடி, வன விலங்குகள் மீது தாக்குதல், மனித உடல் தகனம் உள்ளிட்டு அடுக்கடுக்கான புகார்கள் குறித்து விசாரிப்பதற்கும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய முறையில் விசாரணை செய்து உண்மைகளை கண்டறிய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *