தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் அஜித் இன்று தனது 55-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,” இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார். அனைவரையும் உத்வேகப்படுத்தியதற்காகவும், இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததற்காகவும் நன்றி.
நீங்கள் எங்களின் மிகப்பெரிய பெருமை. எங்களின் பத்ம பூஷன். உங்களின் அன்பை பெறுவதை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.