உங்களை நெகிழ வைத்த மருத்துவர்கள் பற்றி ‘மை விகடன்’ பக்கத்தில் எழுதுங்கள்! | My Vikatan celebrating Doctors

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

மருத்துவர்கள் வெறும் நோயைக் குணப்படுத்துபவர்கள் அல்ல; மரணத்தின் வாசலில் நின்று ஒரு மனிதனுக்கு நம்பிக்கையைத் திருப்பித் தருபவர்கள்!

வருகிற ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்து உங்களை உருக வைத்த, வியக்க வைத்த, நெகிழ வைத்த மருத்துவர்களைப் பற்றி எழுத “மை விகடன்’ உங்களுக்கு ஒரு உன்னதமான களம் அமைத்துத் தருகிறது.

*நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியவை:

*உங்கள் வாழ்க்கையிலோ அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்விலோ ஒளியேற்றிய அந்த மருத்துவர் யார்? அவரை உங்களுக்கு ஏன் பிடிக்கும்?

*உங்கள் பகுதியில் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்ப்பவர்கள், கட்டணமில்லா இலவச முகாம்கள் நடத்துபவர்கள் என எளிய மக்களுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட விசித்திரமான, உன்னதமான மருத்துவர்கள் பற்றிய பதிவுகள்.

*கட்டணத்திற்காகக் காத்திராமல் மனிதாபிமானத்தோடு உயிரைக் காப்பாற்றிய ஏதேனும் ஒரு மறக்க முடியாத மருத்துவமனை அனுபவம் உண்டா?

உங்கள் நினைவுகளையும், அந்த மருத்துவர்களின் சேவை பற்றிய கட்டுரைகளையும் (250 – 700 வார்த்தைகளுக்குள்), முடிந்தால் அவர்களின் புகைப்படத்துடன் my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

உங்களது கருத்துக்களை கட்டுரையாக உடனே பதிவு செய்யுங்கள்!

நினைவில் கொள்க:

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *